Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் அணியில் இடம் இல்லையா? கவுன்டியில் சதம் விளாசிய முரளி விஜய்க்கு பதில் சொல்லுங்க

நாட்டிங்ஹம் : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த முரளி விஜய்க்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கவுன்டி போட்டியில் சதம் அடித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் சரியாக ஆடவில்லை எனக் கூறி அவருக்கு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

இதை அடுத்து இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ் அணியில் இணைந்தார் முரளி விஜய். அங்கே பேட்டால் பேசி இந்திய அணி தேர்வாளர்களை கேள்வி கேட்டு வருகிறார்.

ஒரு ஆப், ஒரு ஃபுல்

ஒரு ஆப், ஒரு ஃபுல்

முரளி விஜய் கவுன்டி போட்டிகளில் எசக்ஸ் அணிக்காக ஆடி, ஒரே போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 56 ரன்கள் மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 100 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் பார்ம் அவுட் என்ற பேச்சுகளுக்கு ஒரே போட்டியில் முடிவு கட்டியுள்ளார்.

தேர்வாளர்களுக்கு அழுத்தம்

தேர்வாளர்களுக்கு அழுத்தம்

ஏற்கனவே, இங்கிலாந்து தொடரில் இந்திய அணி வீரர்களில் தேர்வு முறைகளில் பல குழப்பம் செய்ததாக கூறப்பட்டு வருகிறது. பல வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தும் அணி நிர்வாகம் பயன்படுத்தவில்லை. முரளி விஜய்யை திடீரென்று பாதி தொடரோடு இந்தியாவிற்கு அனுப்பி விட்டனர் தேர்வாளர்கள். இந்தியா இங்கிலாந்து டெஸ்டில் தோற்று விமர்சனத்தை சந்தித்து வரும் வேளையில், முரளி விஜயின் இந்த சதம் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

முரளி விஜய்க்கு இடம்?

முரளி விஜய்க்கு இடம்?

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை, முரளி விஜய் தற்போது கவுன்டி போட்டிகளில் பங்கேற்காமல், இருந்து இருந்தால், அவர் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் ஆடி, தன்னை நிரூபித்து விட்டு காத்திருக்க வேண்டும். ஆனால், அவர் எங்கே தன் ஆட்டம் சரியில்லை என கூறினார்களோ அங்கேயே சதம் அடித்து விட்டார். இப்போது அணியில் இடம் கேட்க அவருக்கு அத்தனை உரிமையும் உள்ளது.

வரிசையில் வீரர்கள்

வரிசையில் வீரர்கள்

ஏற்கனவே, டெஸ்ட் துவக்க வீரர்கள் பட்டியலில், தவான், ராகுல், ப்ரித்வி ஷா இருக்கிறார்கள். மாயன்க் அகர்வாலை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும், ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் இருக்கும் நிலையில், முரளி விஜய்க்கும் இப்போது இடமளிக்க வேண்டிய அழுத்தத்தை தேர்வுக் குழு சந்தித்துள்ளது.

Story first published: Friday, September 14, 2018, 12:24 [IST]
Other articles published on Sep 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+