என்னமோ நடந்துவிட்டது.. முக்கிய போட்டிகளிலிருந்து திடீரென விலகிய தமிழக வீரர்.. வேறு எதுவும் திட்டமோ?

சென்னை: இந்திய அணியை சேர்ந்த மூத்த வீரர் முரளி விஜய் திடீரென முதல் தர போட்டிகளில் விளையாடாமல் விலகி இருக்கிறார்.

இந்திய அணியில் தமிழக வீரர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். அஸ்வின் டெஸ்ட் அணியில் சிறப்பாக ஆடி வருகிறார். டி 20 அணியில் வாஷிங்டன் சுந்தர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம் ஒருநாள் மற்றும் டி 20 அணியில் தமிழக வீரர் நடராஜன் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறார்.

தாய் மண்ணில் இறங்க போகிறார்.. உற்று கவனிக்கும் பிசிசிஐ.. நடராஜனுக்கு காத்திருக்கும் பெரிய வாய்ப்பு!தாய் மண்ணில் இறங்க போகிறார்.. உற்று கவனிக்கும் பிசிசிஐ.. நடராஜனுக்கு காத்திருக்கும் பெரிய வாய்ப்பு!

நிலைமை என்ன

நிலைமை என்ன

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியை சேர்ந்த மூத்த வீரர் முரளி விஜய் திடீரென முதல் தர போட்டிகளில் விளையாடாமல் விலகி இருக்கிறார். இன்னும் சில நாட்களில் மிக முக்கியமான சையது முஷ்டாக் அலி கோப்பை டி 20 போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான தமிழக அணியை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

எப்படி

எப்படி

அதேபோல் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட மற்ற முதல்தர போட்டிகளும் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் தர போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று முரளி விஜய் முடிவு எடுத்துள்ளார். குடும்ப காரணங்களை குறிப்பிட்டு முரளி விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மோசம்

மோசம்

ஆனால் இவருக்கு குடும்பத்தில் என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.அதே சமயம் இவர் ஓய்வு முடிவை அறிவிக்கும் திட்டம் எதிலும் இருக்கிறாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய இவர் சரியாக ஆடவில்லை.

டெஸ்ட்

டெஸ்ட்

அதேபோல் டெஸ்ட் அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முரளி விஜய் இடத்தை மயங்க் அகர்வால் உறுதியாக பிடித்துக் கொண்டார்.ஒருநாள் அணியிலும் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படாது .

கடினம்

கடினம்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் முரளி விஜய் இந்த முறை முதல் தர போட்டிகளில் ஆட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். ஒருவேளை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் முரளி விஜய் இருக்கிறாரா என்று கேள்வி இதனால் எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Murali Vijay reportedly decided not to play any first class games as of now due to family reason.
Story first published: Sunday, December 20, 2020, 16:58 [IST]
Other articles published on Dec 20, 2020

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X