Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னமோ நடக்கிறது.. மொத்தமாக ஓரம்கட்டப்பட்ட தமிழக வீரர்.. அப்படியே ஒதுங்கிவிட்டார்.. ஷாக்கிங்!

சென்னை: இந்திய அணியை சேர்ந்த மூத்த வீரர் முரளி விஜய் ஐபிஎல் தொடங்கி சர்வதேச போட்டிகள் வரை அனைத்தில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து ஆடிய முக்கியமான வீரர்களில் ஒருவர் முரளி விஜய். இவர் இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான இடத்தில் இருந்தார்.

ஆனால் இடையில் பார்மை இழந்த காரணத்தால் டெஸ்ட் அணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த ஒன்றரை வருடமாக இவர் டெஸ்ட் அணியில் பெரிதாக வாய்ப்பு பெறவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

தற்போது டெஸ்ட் அணியில் இவரின் வாய்ப்பு ஏறக்குறைய மொத்தமாக முடிந்துவிட்டது. டெஸ்ட் அணியில் இவருக்கு பதிலாக ரோஹித், மயங்க், சுப்மான் கில் என்று அதிரடி வீரர்கள் வந்துவிட்டனர். இதனால் டெஸ்ட் அணியில் இவர் நீடிக்க வாய்ப்பே இல்லை.

ஒருநாள்

ஒருநாள்

இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியிலும் இவருக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது. கடந்த முறை இவர் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கினார். அதிலும் கூட இவர் சரியாக ஆடவில்லை. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முரளி விஜய் பல முறை காரணமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் முரளி விஜய் முதல் தர போட்டிகளில் விளையாடாமல் விலகி இருக்கிறார். சையது முஷ்டாக் அலி கோப்பை டி 20 போட்டிகளில் இவர் ஆடவில்லை.முதல் தர போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று முரளி விஜய் முடிவு எடுத்துள்ளார். குடும்ப காரணங்களை குறிப்பிட்டு முரளி விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மோசம்

மோசம்

ஆனால் இவருக்கு குடும்பத்தில் என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதில் இவர் கவனம் செலுத்தாத நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணி இவர் ரிலீஸ் செய்துள்ளது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இதனால் இவரை 2021 ஐபிஎல்லில் வேறு அணிகள் ஏலம் எடுக்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. மொத்தமாக இவரின் கிரிக்கெட் கெரியர் இதனால் முடிவிற்கு வந்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது. இவரை மீண்டும் சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, January 27, 2021, 18:50 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+