வீரேந்திர ஷேவாக் காயம்-இந்திய அணியில் முரளி விஜய்

மேற்கு இந்தியத் தீவுகளில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் ஷேவாக்கும் இடம் பெற்றிருந்தார். துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஷேவாக் திடீரென காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான காயம் அது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடி வருகிறார் முரளி விஜய். முதலில் இவரை இந்திய அணியில் சேர்க்காமல் விட்டு விட்டனர். இது சர்ச்சையையும் எழுப்பியது. இந்த நிலையில் ஷேவாக் காயமடைந்துள்ளதால், அவருக்குப் பதில் இந்திய அணியில் விஜய்க்கு இடம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து முரளி விஜய் மகிழ்ச்சியும், சிறப்பாக ஆட முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications