Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை பாகிஸ்தான் எல்லை கிட்ட இருந்து தான் பிடிச்சோம்.. முஷாரப்பை கலாய்த்த கங்குலி

Recommended Video

தோனியை பற்றி விசாரித்த முஷாரப் - கலாய்த்த கங்குலி- வீடியோ

கொல்கத்தா : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன், தோனி பற்றி பேசிய சுவாரஸ்யமான உரையாடலை கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகராக இருந்தார்.

அவரே அதை பல முறை கூறி இருக்கிறார். இந்த நிலையில், கங்குலியுடன் தோனி பற்றி முஷாரப் விசாரித்துள்ளார்.

தோனி களத்தில் நின்றாலே வெற்றி

தோனி களத்தில் நின்றாலே வெற்றி

தோனி 2006ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் பாகிஸ்தான் சென்று ஆடினார். அப்போது இந்திய அணி 4-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் தோனி அதிரடியாக ஆடினார். தோனி களத்தில் நின்றாலே வெற்றி என்ற நிலை அப்போது இருந்தது.

தோனியை எங்கே பிடித்தீர்கள்?

தோனியை எங்கே பிடித்தீர்கள்?

அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தோனியின் ஸ்டைலான அதிரடி ஆட்டத்திலும், அவரது நீளமான ஹேர்ஸ்டைலிலும் மயங்கி விட்டார். அப்போது தோனியிடம் முடி வெட்டாமல் இருக்குமாறு கூட கேட்டுக் கொண்டார். அப்படி தோனி ரசிகராக இருந்த முஷாரப், கங்குலியிடம் தோனியை எங்கே பிடித்தீர்கள் என கேட்டுள்ளார்.

வாகா எல்லை அருகே தோனி

வாகா எல்லை அருகே தோனி

கங்குலி அதற்கு, "தோனி பாகிஸ்தானின் வாகா எல்லை கிட்ட போய்ட்டு இருந்தார். நாங்க இழுத்துட்டு வந்துட்டோம்" என்று கூறி முஷாரப்பை கடுப்பேத்தி உள்ளார். தோனி பாகிஸ்தான் வீரராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற முஷாரப்பின் எண்ணத்தை தான் கங்குலி குத்திக் காட்டி இப்படி கூறினார்.

தோனியின் நிலை சரியில்லை

தோனியின் நிலை சரியில்லை

தோனி பின்னர் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தன் நீளமான முடியை வெட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பல உயரங்களை தொட்ட தோனியின் நிலை தற்போது சரியாக இல்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் தோனி ரன் குவிக்க சிரமப்படுகிறார்.

கங்குலி எச்சரிக்கை

கங்குலி எச்சரிக்கை

தற்போது தோனி நன்றாக ஆடினால் மட்டுமே இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கங்குலி எச்சரித்துள்ளார். எத்தனை அனுபவம் இருந்தாலும் சரியாக செயல்பாடுகள் இல்லாத பட்சத்தில் வேறு ஒருவர் நம் இடத்தை எடுத்துக் கொள்வார்கள் என கூறினார் கங்குலி.

2019 உலகக்கோப்பை வரை..

2019 உலகக்கோப்பை வரை..

தோனி டி20 அணிகளில் இடம் பெறாத நிலையில், ஒருநாள் போட்டி அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 2019 உலகக்கோப்பை வரை தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Tuesday, November 27, 2018, 11:40 [IST]
Other articles published on Nov 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+