
வங்கதேசம் வெற்றி
முஷ்பிகுர் ரஹீமும் இவருக்கு சளைத்தவர் அல்ல. இலங்கையும், வங்கதேசமும் கடந்த மே மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்விளையாடின. இதில், 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

சிக்கிய முஷ்பிகுர்
இந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் நின்ற குணதிலகா, பந்தை மெஹிதி ஹசனிடம் மெதுவாக தட்டிவிட, மறுமுனையில் நின்றிருந்த பதும் நிஷங்கா, சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். பிறகு, பவுலர் பந்தை தடுத்து நிறுத்த பின்வாங்கிவிட்டார். அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாக, வசமாக சிக்கிக் கொண்டார்.

சிறந்த வீரர்
இந்த நிலையில், அதே இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முஷ்பிகுர் சிறப்பாக விளையாடியதற்காக, அவருக்கு மே மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீரர் எனும் பட்டத்தை ஐசிசி வழங்கியுள்ளது. இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. இத்தொடரில் அவர் ஒரு சதம் உட்பட 237 ரன்களை மூன்று போட்டிகளில் குவித்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததால், அவருக்கு இந்த பட்டம் வழங்ககப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்
இதுகுறித்து ரசிகர்கள் பலர் சமூக தளங்களில், "ஒரு வீரர்.. அதுவும் மூத்த வீரர், எதிரணி பிளேயர் ஒருவரை தள்ளிவிடச் சொல்லி, தனது அணியின் சக வீரரிடம் கூறுகிறார். இதற்கு அவர் நியாயமாக பார்த்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு முஷ்பிகுர் ரஹீமுக்கு ஐசிசி விருது வழங்கி அழகு பார்க்கிறது என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், மே மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது ஸ்காட்லாந்தின் கேத்ரினுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











