Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் தான் பெஸ்ட்.. நச்சுன்னு சொன்ன முத்தையா முரளிதரன்.. புரிய வேண்டியவருக்கு புரிஞ்சா சரி!

Recommended Video

இந்திய சூழல் பந்துவீச்சாளர்கள் குறித்து முரளிதரன் கருத்து- வீடியோ

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் உலகின் சிறந்த ஆப்-ஸ்பின்னர் என முத்தையா முரளிதரன் கருத்து கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வரும் அஸ்வின், காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதை அடுத்து, வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ்வை நம்பர் 1 ஸ்பின்னர் என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி இருந்தார்.

சிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின்

சிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின்

இது பற்றி இந்தியா வந்திருக்கும் முத்தையா முரளிதரனிடம் கேட்ட போது, "குல்தீப் மிக சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால், இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் குல்தீப் யாதவ்வா அல்லது அஸ்வினா என நான் கருத்து கூறுவது சரியல்ல. உலகில் சிறந்த ஆப்-ஸ்பின்னர் என்று வந்தால் அஸ்வின் தான் சிறந்தவர்" என கூறினார்.

விக்கெட்களை பாருங்கள்

விக்கெட்களை பாருங்கள்

ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என கேட்ட போது அஸ்வினை விட சிறந்தவர் என யாரை நீங்கள் சொல்வீர்கள்? நாதன் லியோனா? நான் அஸ்வின் எடுத்த விக்கெட்களின் அடிப்படையில் செல்வேன் என்று கூறினார். அஸ்வின் 300 விக்கெட்களுகும் அதிகமாக விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பற்றி..

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பற்றி..

மேலும், ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப், சாஹல் குறித்து பேசுகையில், அவர்கள் பந்துவீச்சை துணை கண்டத்துக்கு வெளியே உள்ள பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள முடியாமல் போவதற்கு காரணம், அவர்கள் அதிகம் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொண்டதில்லை என்பது தான் என்றார்.

துணை கண்ட நாடுகள்

துணை கண்ட நாடுகள்

அவர்கள் இருவரும் தற்போது வெற்றிகரமாக இருக்கிறார்கள். ஆனால், அவரகள் துணை கண்ட நாடுகளுக்கு எதிராக அதிகம் ஆடியதில்லை. துணை கண்ட அணிகளுக்கு எதிராக அவர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றும் கூறினார் முரளிதரன்.

ரவி சாஸ்திரி கேட்பாரா?

ரவி சாஸ்திரி கேட்பாரா?

முரளிதரன் சொல்லும் கருத்துக்கள் ரவி சாஸ்திரி காதுகளுக்கு போய் சேருமா? என்பது தெரியவில்லை. காரணம், அவர் தான் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தான் முக்கியம் என கூறி வருகிறார். குல்தீப் யாதவ் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியதை வைத்து இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் என கூறினார் அவர்.

பின்னடைவாக அமைந்த காயம்

பின்னடைவாக அமைந்த காயம்

அஸ்வினை பொறுத்தவரை ஒருநாள் போட்டி அணியில் தன் இடத்தை இழந்தார். பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டாலும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் தான் அவருக்கு பின்னடைவாக அமைந்தது. அதையே காரணமாக வைத்து அவரை ஓரங்கட்டும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

Story first published: Tuesday, February 12, 2019, 16:06 [IST]
Other articles published on Feb 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+