பாஸு தாடிதான் டோட்டல் டீமுக்கே மாஸு தெரியும்ல.. ஜடேஜா!
பெர்த்: தான் வைத்துள்ள தாடியால்தான் ஒட்டுமொத்த இந்திய அணிக்குமே ராசி என்று கூறியுள்ளார் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.
ஆரம்பத்தில் ஜடேஜா தாடி மீசையில்லாமல் மில்க் பாய் போலத்தான் இருந்தார். பின்னர் தாடி மீசைக்கு மாறினார். ஆனால் ஷிகர் தவான் முறுக்கிய மீசையுடன் வலம் வர ஆரம்பித்தபோது, ஜடேஜாவும் தனது மீசையை முறுக்கி விட்டு முரட்டுத்தனம் காட்ட ஆரம்பித்தார். இப்போது தாடி மீசைதான் ஜடேஜாவின் சிம்பலாகிப் போயுள்ளது.
இந்த தாடிதான் அணிக்கே ராசியாக இருப்பதாகவும் அவர் பெருமிதம் கொண்டு கூறுகிறார். முன்பை விட இப்போது தாடி சற்று அடர்த்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடியும் வரை
உலகக் கோப்பைத் தொடர் முடியும் வரை தாடி வளர்க்கப் போவதாக கூறுகிறார் ஜடேஜா. அதன் பின்னர்தான் அதை எடுப்பது குறித்து பரிசீலிக்கப் போகிறாராம்.

அடுத்தடுத்த வெற்றிக்கு இதுதான் காரணம்
இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பவுலிங்குக்குப் பின்னர் பேசிய ஜடேஜா, இந்த தாடியால்தான் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறோம் என்றார் சிரித்தபடி.

ஆமாய்யா.. அப்படித்தான் நடக்குது
அவர் சொல்வது உண்மையோ என்னவோ, உலகக் கோப்பைத் தொடரில் முதல் மூ்ன்று போட்டிகளிலும் கஷ்டமே இல்லாமல் ஜெயித்துள்ளது இந்தியா. இன்று மேற்கு இந்தியத் தீவுகளையும் தனது பந்து வீச்சால் சுருட்டிப் போட்டு விட்டது.

தாடி இல்லாம..ஸாரி பாஸ்!
ஜடேஜா மேலும் கூறுகையில் ராசி மட்டுமல்லா, தாடி இல்லாமல் எனது முகம் நன்றாக இருக்காது. அதுவும் கூட நான் தாடி வளர்க்க ஒரு காரணம் என்றார்...!
அதச் சொல்லு அய்யனாரே!


Click it and Unblock the Notifications