பேட்ஸ்மென்களை காலி செய்ய எங்கிட்ட இருக்கு சூப்பர் பிளான்…! பந்துடன் காத்திருக்கும் முகமது சமி
மும்பை:உலக கோப்பை தொடரில் எதிரணி வீரர்களுக்கு யார்க்கர் வீசி, ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் வகையில் விளையாட உள்ளதாக முன்னணி பந்து வீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை போலவே, பந்து வீச்சிலும் சிறப்பாகவே இருக்கிறது. உலகின் சிறந்த பவுலரான பும்ரா அணியில் இருக்கிறார். இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இருப்பதால் உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு அதிகம் இருக்கிறது.

உலக கோப்பை தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. தமது பந்துவீச்சு இந்த தொடரில் எப்படி இருக்கும் என்று அவர் கூறியதாவது: உலக கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற, முயற்சி செய்வேன்.
எனது உடற்தகுதி தற்போது சிறப்பாக இருக்கிறது. எடை குறைப்பின் காரணமாக முன்பைவிட வேகமாக பந்துவீச முடிகிறது. தற்போது நான் குறிப்பிட்ட இடத்தில் யார்க்கர் வீச தயாராகி வருகிறேன்.
யார்க்கர் பந்தின் மூலம் எதிரணியை கட்டாயம் என்னால் கட்டுக்குள் வைக்க முடியும். தொடர்ந்து யார்க்கர் வீசவும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப் படுத்தும் வகையிலும் பந்து வீசவும் தயாராகி வருகிறேன்.
ஆகவே இந்த தொடரை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மேலும் உலக கோப்பையை இந்திய அணி வெல்ல எனது சிறப்பான பவுலிங் உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications