Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒவ்வொரு பந்துலயும் சிக்ஸ் அடிச்சு ஆடணும்... இதுதான் என்னோட திட்டம்.. சஞ்சு சாம்சன் உறுதி

ஷார்ஜா : போட்டிகளில் நின்று விளையாடுவதுதான் தன்னுடைய விளையாட்டின் திட்டம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

தான் அடித்து ஆடும் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸ்களை அடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் கிடைத்த 5 மாத இடைவெளியை தான் தன்னுடைய பிட்னசை மேம்படுத்துவதில் செலவிட்டதாகவும், தற்போது அது கைகொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தன்னுடைய துவக்க போட்டியிலேயே அதிரடி ரன்களை அந்த அணி குவிக்க காரணமாக இருந்தார் அந்த அணியின் சஞ்சு சாம்சன்.

ஒவ்வொரு பந்திலும் சிக்ஸ்

ஒவ்வொரு பந்திலும் சிக்ஸ்

இந்நிலையில் தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் நின்று விளையாடுவதை தான் நோக்கமாக கொண்டு விளையாடுவதாக சஞ்சு சாம்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தான் அடித்து ஆடும் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸ்களை அடிப்பதையும் தான் தனது நோக்கமாக வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிக பிட்னஸ் பயிற்சிகள்

அதிக பிட்னஸ் பயிற்சிகள்

கடந்த 5 மாதங்களாக லாக்டவுன் காரணமாக கிடைத்த இடைவெளியை தான் முறையாக பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்த காலத்தில் தன்னுடைய பிட்னஸ், டயட் மற்றும் பயிற்சிகளை செம்மையாக செய்ததாகவும் அவர் மேலும் கூறினார். அதன் காரணமாகவே தற்போது தன்னால் நிலைத்து ஆட முடிந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாம்சன் உற்சாகம்

சாம்சன் உற்சாகம்

நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் முகங்களில் மகிழ்ச்சியை வரவழைத்தது சிறப்பானது என்றும், இதை தொடர முடியும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் சாம்சன் மேலும் கூறினார். முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதவுள்ளது.

Story first published: Wednesday, September 23, 2020, 14:34 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+