அவர்தான் எனக்கு வழிகாட்டும் சக்தி.. கேப்டனுக்கு வாழ்த்து கூறிய ரெய்னா
சென்னை : முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கேவின் கேப்டனுமான எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் சிஎஸ்கேவின் இரு தூண்கள் போல செயல்படுபவர்கள்.
Recommended Video
சிஎஸ்கே இதுவரை 3 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த வெற்றிகளில் இவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டவர்கள்.
இந்நிலையில் நண்பர்கள் தினத்தையொட்டி இவர்கள் இருவரின் வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்க்ததில் பதிவிட்டுள்ளது. இதற்கு ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவில் தொடரும் நட்பு
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமாக விளங்கி வருபவர் எம்எஸ் தோனி. இந்த அணி ஐபிஎல்லில் இதுவரை 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த வெற்றிகளில் இவர்கள் இருவரின் பங்களிப்பும் சமமானது. இவர்கள் இருவரின் நட்பும் ஆட்டத்தை மீறி வெளிப்பட்டு வருகிறது.
F.R.7.3.N.D.S - together in the pursuit of perfect10n, for a perfect den. #WhistlePodu #Yellove #FriendshipDay 💛🦁 pic.twitter.com/zfGNjn3A8M
— Chennai Super Kings (@ChennaiIPL) August 2, 2020
நண்பர்கள் தினத்தையொட்டி பதிவு
இந்நிலையில் நண்பர்கள் தினத்தையொட்டி, இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் போற்றும்வகையில் சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது. இந்நிலையில் நண்பர்கள் தினத்தில் இந்த மலரும் நினைவுகளை ஏற்படுத்தியதற்கு சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து ரெய்னா பாராட்டு
சிஎஸ்கேவின் பதிவில் கமெண்ட் செய்துள்ள ரெய்னா, எம்எஸ் தோனி தனக்கு ஒரு நண்பர் மட்டுமல்ல என்றும் அவர்தான் தனக்கு வழிகாட்டும் சக்தி, வழிகாட்டி மற்றும் தன்னுடைய கடினமான நேரங்களில் தன்னுடன் இருந்தவர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு மஹி பாய்க்கு நன்றி என்று கூறியுள்ள அவர், நண்பர்கள் தின வாழ்த்தையும் கூறியுள்ளார். சீக்கிரமே சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த நிலையில் முன்னதாக சிஎஸ்கே சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி மற்றும் ரெய்னா இருவரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து அந்த அணிக்காக 3 ஐபிஎல் கோப்பைகளை பரிசளித்துள்ள நிலையில், தற்போது யூஏஇயில் நடைபெறும் ஐபிஎல் 2020 கோப்பையையும் வெல்வார்கள் என்பதே சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications