என்னை அணியில் எடுக்கவே யோசித்தனர்.. போட்டிக்கு பின் விளாசிய அஸ்வின்.. வெளியான பரபர உண்மை!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய தொடரில் தன்னை களமிறக்குவது குறித்து இந்திய அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசித்ததாக தமிழக வீரர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி நேற்று மிகவும் சிறப்பாக ஆடி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. இதில் இந்திய அணி சார்பாக இரண்டு இன்னிங்சில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பவுலிங்
இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில், 400 விக்கெட்டுகள் எடுப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்திய அணி வெற்றிபெறும் போட்டி ஒன்றில் இப்படி சாதனை நிகழ்த்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 145 ரன்னுக்கு நாங்கள் அவுட் ஆன பின் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தோம். அதிக ரன்களை அடிக்கவில்லையே என்று அச்சத்தில் இருந்தோம்.

இங்கிலாந்து
இங்கிலாந்தை விட 33 ரன்கள்தான் நாங்கள் கூடுதலாக முதல் இன்னிங்சில் எடுத்து இருந்தோம். இது பெரிய ஸ்கோர் கிடையாது. ஆனால் பிட்சை பயன்படுத்தி இரண்டாவது இன்னிங்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்தோம்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் என்னை எடுத்த போது நான் ஆடும் அணியில் இடம்பெறுவதே சந்தேகமாக இருந்தது. ஆம் என்னை அணியில் எடுப்பதே கேள்வியாக இருந்தது. ஆனால் ஜடேஜா அப்போதுதான் காயம் அடைந்தார்.

வாய்ப்பு
இதனால் வேறு வழியின்றி எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என்று நம்புகிறேன். ஐபிஎல் போட்டிகளில் நான் நன்றாக பவுலிங் செய்தேன், அந்த பார்மை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications