Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாத்தவிட எனக்கு அதுதான் முக்கியம்... அடம்பிடிக்கும் தினேஷ் கார்த்திக்!

சென்னை : தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கடந்த சையத் முஸ்டாக் அலி கோப்பையை சிறப்பான வகையில் வெற்றி கொண்டவர்.

இந்திய அணியில் தொடர்ந்து விளையாட விருப்பத்துடன் உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தன்னுடைய திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அடுத்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

My primary objective is to play the upcoming T20 World Cups for India -Dinesh Karthik

இந்திய அணியில் இணையும் விருப்பத்துடன் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருபவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் சில போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இடையிலேயே இவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பு கைமாற்றப்பட்டது.

இந்நிலையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்பட உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். டி20 வடிவத்தில் அவர் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சையத் முஸ்தாக் போட்டித் தொடரில் தமிழக அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 10, 2021, 20:55 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+