போதை மருந்து சர்ச்சை: யுவராஜ்சிங் குடும்ப சண்டை வீதிக்கு வந்தது.. மருமகளை விளாசும் யோக்ராஜ்சிங்
டெல்லி: என் மகன் போதைப்பொருளுக்கு அடிமை இல்லை என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி மனைவி ஆகான்ஷா சர்மா சல்மான் கான் நடத்தும் பிக்ஸ் பாஸ் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் யுவியின் குடும்பத்தார் மீது ஏகப்பட்ட புகார்களை தெரிவித்தார்.
யுவியின் மொத்த குடும்பமும் போதைப் பொருள் உட்கொள்ளும் என்று ஆகான்ஷா கூறினார்.

யுவராஜ்
யுவராஜின் தம்பியோடு சேர்ந்து தானும் போதைப் பொருள் உட்கொண்டதாக ஆகான்ஷா தெரிவித்தார். மேலும் யுவராஜும் போதைப் பொருள் உட்கொண்டார், இதை அவரே தன்னிடம் கூறினார் என்றார் ஆகான்ஷா.

யோக்ராஜ்
இந்த ஆகான்ஷா என்ன கண்ட்றாவியை பேசுகிறார்? அவர் பேசுவதில் உண்மை இல்லை. நான் நான்கு குழந்தைகளின் தந்தை. என் குழந்தைகள் யாருக்கும் போதைப் பொருள் பழக்கம் இல்லை என யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சிங்கம்
என் பிற 3 குழந்தைகளை போலவே யுவராஜ் சிங்கும் சிங்கம். அவர்கள் யாரும் புல்லை திண்ண மாட்டார்கள். யுவராஜ் மீது பழிபோடும் பெண் முதலில் அவர் வீட்டை கவனிக்கட்டும் என்கிறார் யோக்ராஜ்.

டாக்டர்
யுவராஜ் சிங்கின் சில பழக்கங்களால் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் யுவராஜுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என அவருக்கு நெருக்கமான டாக்டர் குமார் தெரிவித்துள்ளார். யுவிக்கு போதைப் பொருள் பழக்கமே இல்லை என்கிறார் குமார்.


Click it and Unblock the Notifications