Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அண்ணன் என்.சீனிவாசன் கிரிக்கெட் 'பாஸ்'... தம்பி ராமச்சந்திரன் ஒலிம்பிக் சங்க பாஸாகிறார்...!

N Srinivasan's brother N Ramachandran set to be elected as Indian Olympic Association president
டெல்லி: அண்ணன் என். சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவுள்ள நிலையில், அவரது தம்பி என். ராமச்சந்திரன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகப் போகிறார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இன்றைய தேர்தலில் ராமச்சந்திரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மேலும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் 14 மாதத் தடைக்குப் பின்னர் மீண்டும் ஒலிம்பிக் வளையத்திற்குள் இந்தியாவைக் கொண்டு வர இன்றைய தேர்தல் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கோ கோ கழக தலைவர் ராஜீவ் மேத்தா பொதுச் செயலாளராகவும், அகில இந்திய டென்னிஸ் சங்கத் தலைவர் அனில் கண்ணா பொருளாளராகவும் செயல்படவுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் அஜய் குமார் செளதாலா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக பனாட் தேர்வானார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது. சங்க விவகாரத்தில் இந்திய அரசு தலையிடுவதைக் கண்டித்து இந்த நடவடிக்கையை எடுத்தது சர்வதேச ஒலிம்பிக் சங்கம். மேலும் தேர்தலையும் செல்லாது என்று அறிவித்து விட்டது. இதையடுத்து இன்று மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

என். சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அவரது தம்பி ராமச்சந்திரன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 9, 2014, 15:11 [IST]
Other articles published on Feb 9, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+