Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் கிரிக்கெட்டையே நிறுத்தி இருப்பேன்.. 14 ஆண்டுக்கு முன் ஸ்ரீனிவாசன் சொன்ன கருத்து.. இந்திய அணி பதிலடி

மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ள நிலையில் 14 ஆண்டுக்கு முன் சிஎஸ்கே அணியின் நிறுவனத் தலைவரும் பிசிசிஐயில் முன்னாள் தலைவருமான என். சீனிவாசன் சொன்ன கருத்து ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்திய அணியில் முன்னாள் கேப்டனான டயானா எதுல்ஜி, சீனிவாசன் இப்படி ஒரு கருத்தைச் சொன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பேசியது தான் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. 2017 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹார்மன் 171 ரன்கள் அடித்திருந்தார்.

India Women cricket team

அவருக்கு பாராட்டு அளிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டயானா, 2011 ஆம் ஆண்டு தாம் பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசனை சந்தித்து உலக கோப்பையை வென்றதற்கு வாழ்த்து சொன்ன போனதாகவும், அப்போது சீனிவாசன் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் மகளிர் கிரிக்கெட்டையே நிறுத்தி இருப்பேன் என்று கூறினார். அவருக்கு மகளிர் கிரிக்கெட் என்றால் சுத்தமாக பிடிக்காது என டயானா சுட்டிக்காட்டினார்.

மேலும் பிசிசிஐ ஒரு ஆணாதிக்க நிர்வாகத்தை கொண்டதும் என்றும் தான் பிசிசிஐ எப்போதும் எதிர்க்கும் நபராக இருப்பதாகவும் மகளிர் கிரிக்கெட் வளர பிசிசிஐ என்றுமே விட்டதில்லை என்றும் டயானா எதிர்ஜி கூறி இருந்தார். தற்போது இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில் தற்போது சீனிவாசன் கூறிய கருத்து மீண்டும் சமூக வலைத்தளத்தின் வைரல் ஆகி வருகிறது.

சீனிவாசன் இப்படி ஒரு மனநிலையில் இருப்பதால்தான் மகளிர் பிரீமியர் லீக் தொடர் வந்தபோது சிஎஸ்கே அணி மையமாக வைத்து மகளிர் கிரிக்கெட்டில் எந்த முதலிடம் செய்யவில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீனிவாசன் இடமிருந்து இப்படி ஒரு கருத்து வந்திருக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் அவர்கள் குறை கூறியுள்ளனர்.

சீனிவாசனின் இந்த பழைய கருத்துக்கு இந்திய மகளிர் அணி தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ஹார்மன், விமர்சனங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அது எங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றும் எங்களை விமர்சிப்பவர்களை நாங்கள் குறை கூற விரும்பவில்லை என்றும் பதிலடி கொடுத்திருக்கின்றார்.

Story first published: Monday, November 3, 2025, 19:58 [IST]
Other articles published on Nov 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+