For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் போட்டியின்றி தேர்வு!

By Shankar

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் என் சீனிவாசன்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

N. Srinivasan Elected Unopposed as Tamil Nadu Cricket Association President

சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தொடருகிறார்கள்.

தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் உள்ளிட்ட 6 பேர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியிலும் தொடர்கிறார் சீனிவாசன். ஆனால் ஐபிஎல் பெட்டிங் சர்ச்சை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, பதவியில் இருந்தும் இல்லாத நிலையில் உள்ளார்.

அடுத்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார் சீனிவாசன்.

Story first published: Monday, June 23, 2014, 8:21 [IST]
Other articles published on Jun 23, 2014
English summary
BCCI's president-in-exile N Srinivasan, was on Sunday unanimously elected as the chief of the Tamil Nadu Cricket Association (TNCA) for the 14th consecutive
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+