Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு மீண்டும் 'சீனி' போட்டி

சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக என்.சீனிவாசன் 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 29-ந் தேதி கூடுகிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.

16 வாக்குகள் பெற்றால் வெற்றி

16 வாக்குகள் பெற்றால் வெற்றி

மொத்தமுள்ள 31 வாக்குகளில் 16 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.

சீனி போட்டி

சீனி போட்டி

தற்போதைய தலைவர் என்.சீனிவாசன் மீண்டும் போட்டியிடப் போவதாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் பிக்சிங்கால் சீனிக்கு எதிர்ப்பு

ஐபிஎல் பிக்சிங்கால் சீனிக்கு எதிர்ப்பு

ஆனால் 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் பிக்சிங் சர்ச்சையில் என். சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் என்.சீனிவாசனுக்கு ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில்..

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில்..

ஒருவேளை சீனிவாசன் தலைவராக தொடர உறுப்பினர்கள் யாரும் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில் அவர் மேலும் ஒரு ஆண்டு காலம் பதவியில் நீட்டிக்க விதிமுறையில் வழிவகை உள்ளது.

ஷசாங் மனோகர் போட்டி?

ஷசாங் மனோகர் போட்டி?

இதில் சரத்பவாரின் ஆதரவுடன் ஷசாங் மனோகர் போட்டியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

29-ந் தேதி பைனல் மேட்ச்

29-ந் தேதி பைனல் மேட்ச்

ஆக 29-ந் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கான பைனல் மேட்ச் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Story first published: Friday, September 20, 2013, 11:44 [IST]
Other articles published on Sep 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+