Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித், ராகுல் மீது இப்படியா சந்தேகப்படுவது.. கொதித்தெழுந்த நாசர் ஹுசைன்.. என்ன காரணம்?

வெல்லிங்டன்: இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்போதும் பயத்திலேயே இருக்கிறார்கள் என்ற ஆதெர்டனின் கருத்துக்கு நாசர் ஹுசைன் தரமான பதிலை கொடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் கலக்கிய போதும், அரையிறுதிப்போட்டியில் சற்று மோசமான தோல்வியுடன் வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் ஆட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால் டாப் ஆர்டரே மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.

ஓப்பனர்கள் சொதப்பல்

ஓப்பனர்கள் சொதப்பல்

டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் மிகுந்த பதற்றத்துடனேயே விளையாடினர். குறிப்பாக கே.எல்.ராகுல் பயத்திலேயே பலமுறை விக்கெட்டை பறிகொடுத்தார். இந்நிலையில் பிசிசிஐ வீரர்களின் இடங்களுக்கு ஏற்படுத்தியுள்ள பயம் தான் இந்த சொதப்பலுக்கு காரணமா? என பிரபல தொகுப்பாளர் மைக்கேல் ஆத்தர்டன் கேட்டிருந்தார்.

சந்தேகமான பேச்சு

சந்தேகமான பேச்சு

தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது பேசிய அவர், இந்தியாவில் வீரர்களிடையே உள்ள போட்டி மிகவும் கடினமானதாக இருக்கிறதா? அந்நாட்டில் நிறைய வீரர்கள், இந்திய அணிக்காக விளையாட காத்துக்கொண்டுள்ளனர். எனவே சிறப்பாக ஆடவில்லை என்றால் வாய்ப்பு போகும் என்ற அச்சத்தில் உள்ளனர்களா?.. இதே போல ரோகித், கே.எல்.ராகுல் போன்றோருக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் வழங்குவதும் அழுத்தத்தை தரலாமா? எனக்கேட்டார்.

நாசர் ஹுசைன் பதில்

நாசர் ஹுசைன் பதில்

இதற்கு பதிலளித்த நாசர் ஹுசைன், நீங்கள் நிறைய குழப்பிக்கொள்கிறீர்கள். அவர்கள் திறமையில்லாத வீரர்கள் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவின் டாப் ஆர்டர் ஒன்றும் வாய்ப்பு போய்விடுமோ என்ற பயத்தில் இல்லை. ரோகித் சர்மா போன்ற 3 டபுள் சதங்களை அடித்த வீரரை பற்றி நாம் பேசி வருகிறோம். கே.எல்.ராகுல் ஒரு அதிரடி ஆட்டக்காரர்.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

வாய்ப்பு போய்விடும், பணம் அதிகம் என என்ற அழுத்தங்கள் எதுவுமே பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு அவ்வபோது சிறு பதற்றம் இருக்கிறது. அதுவே அவர்களின் சிரமத்திற்கு காரணம் என நாசர் ஹுசைன் கூறியுள்ளார். ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர் நடந்து வரும் நியூசிலாந்து தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 18, 2022, 18:02 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+