Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பாலில் நோ பால்.. அவர் ஆடுவது சந்தேகம் தருகிறது.. இந்திய வீரர் நதீம் செய்த காரியத்தால் பரபரப்பு

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் நாள் ஆட்டத்தில் அறிமுக வீரர் நதீம் ஆடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் அதிரடியாக ஆடி உள்ளது.

இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய பவுலர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போட்டு பொளந்து வந்தனர்.

இந்தியா

இந்தியா

இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வந்தனர். முக்கியமாக இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் நேற்று பெரிதாக பலன் அளிக்கவில்லை. இந்திய அணி நேற்று மூன்று ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கியது.

மூன்று ஸ்பின் பவுலர்

மூன்று ஸ்பின் பவுலர்

நதீம், அஸ்வின், சுந்தர் என்று மூன்று ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்கியது. இதில் அஸ்வின் மட்டுமே ஒரு விக்கெட் எடுத்தார். சுந்தர், நதீம் இரண்டு பேருமே நேற்று அதிக அளவில் ரன்களை வாரி வழங்கினார்கள். இந்த நிலையில் நேற்று இந்திய வீரர் நதீம் ஆடிய விதம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

நதீம்

நதீம்

நேற்று ஓவர் வீசிய நதீம் மொத்தமாக 4 நோ பால்களை வீசினார். இந்த நான்கு நோ பால்களும் ஓவரின் கடைசி பந்தில் வீசப்பட்டது ஆகும். இது இரண்டு விதமான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஸ்பின் பவுலர் எப்படி இத்தனை நோ பால் வீச முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பின்

ஸ்பின்

ஸ்பின் பவுலர் எப்படி லைனை தாண்டி, அடிக்கடி நோ பால் வீச முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இவர் சரியாக கடைசி பந்தில் நோ பால் வீசுவது ஏதோ சந்தேகம் தருகிறது என்று இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர். இவர் திட்டமிட்ட இப்படி வீசுவது போல இருக்கிறது.

சந்தேகம்

சந்தேகம்

அவரின் பவுலிங் ஸ்டைல் அத்தனை சிறப்பானதாக இல்லை. நேற்று நல்ல லைனில் வீசினாலும் விக்கெட் எடுக்கும் வகையில் இவர் பவுலிங் செய்யவில்லை என்பது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. இதனால் கோலியின் அணி தேர்வு மீண்டும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

Story first published: Saturday, February 6, 2021, 11:36 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+