Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது 2 ரன்னுக்கு மொத்த டீமும் ஆல் அவுட்டா.. 9 பேர் டக் அவுட்டா.. இதுக்கு பேரு மேட்சா ?

கவுகாத்தி: நாகலாந்து விளையாடிய பிசிசிஐ பெண்கள் அண்டர் 19 போட்டி ஒன்றில் வெறும் 2 ரன்கள் எடுத்து மொத்த அணியும் ஆல் அவுட் ஆகி இருக்கிறிது. கேரளாவுக்கு எதிராக நாகலாந்து எடுத்த இந்த இரண்டு ரன்னே இதுவரை பிசிசிஐ பெண்கள் அணி ஒன்று எடுத்த மிக குறைந்த ரன்னாகும்.

பிசிசிஐ பெண்கள் அண்டர் 19 போட்டி மாநிலங்களுக்கு இடையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் மாநிலங்களும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Nagaland all out for 2 runs with 9 ducks in BCCI Women's U-19 match

இந்த தொடரில் கேரளாவுக்கும் நாகலாந்திற்கும் இடையில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாகலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய நாகலாந்து வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. மேலும் இந்த இரண்டு ரன்களை எடுக்கவே அந்த அணி 17 ஓவர்கள் பேட்டிங் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாகலாந்து அணியை சேர்ந்த 9 பேர் இந்த போட்டியில் டக் அவுட் ஆனார்கள். மேலும் பவுலிங் போட வந்த நாகலாந்து அணி முதல் பந்திலேயே 'வொய்ட்' பந்தை போட்டு மேட்சை டிரா செய்தது. இரண்டாவது பந்தில் கேரளா வீராங்கனை பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார்.

Story first published: Friday, November 24, 2017, 17:42 [IST]
Other articles published on Nov 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+