10 - 15 ஓவர்கள் தான்.. 3வது நாளில் ஆஸி,க்கு உள்ள கடைசி வாய்ப்பு.. தடுத்து நிறுத்துவாரா ரவீந்திர ஜடேஜா!
நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 3வது நாளான இன்று தான் பெரிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுவும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான கம்பேக்கை கொடுக்க முடியும்.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங்கும் சிறப்பாகவே அமைந்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவின் சதம், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரின் அரைசதங்கள் ஆகியவையால் 2ம் நாளின் முடிவில் 321 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.

3வது நாள் போட்டி
ஆட்டத்தின் 3வது நாளான இன்றே இந்திய அணி வெற்றியை பதிவு செய்யும் என்ற கருத்துகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று தான் பெரிய திருப்பத்தையே பிட்ச் கொடுக்கவுள்ளது. அதாவது 2வது நாளின் போது எப்படி இருந்ததோ அதே போலதான் 3வது நாளின் போது தான் பேட்டர்களுக்கு நன்கு உதவி செய்யக்கூடிய வகையில் பிட்ச் இருக்கும். எனினும் அது புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு கிடையாது.

பிட்ச்-ன் நிலைமை
புதிதாக வரக்கூடிய பேட்ஸ்மேன்கள் பிட்ச்-ல் ஏற்படும் சுழலை சமாளிப்பது சற்று கடினமாகும். ஆனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் நேற்றைய கடைசி செஷனில் இருந்து நிதானமாக செட்டில் ஆகி விளையாடி வருகின்றனர். ஒருபுறம் ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இவர்கள் இன்று நின்று ஆடினால் மட்டுமே நல்லதாகும்.

15 ஓவர்கள் தான்
இன்று காலை செஷனில் 10 - 15 ஓவர்களுக்குள் ரவீந்திர ஜடேஜா - அக்ஷர் பட்டேல் பார்ட்னர்ஷிப்பை பிரித்துவிட்டால், பின்னர் இன்றைய நாள் முழுவதும் ஆஸ்திரேலியா அதிக ரன்களை குவிக்கலாம். அதுவும் அதிரடியாகவே ரன்களை சேர்க்கலாம். எனவே ஓரளவிற்கு இன்று முன்னிலை பெற்றுவிட்டால் 4 மற்றும் 5வது நாட்களில் இந்தியா அதனை விரட்டுவது கடினம்.

சதமடித்துவிட்டால்?
ஒருவேளை ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் நிலைத்து நின்று 400 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் டிக்ளர் செய்துவிடுவார்கள். அதன்பின்னர் 4வது மற்றும் 5வது நாட்களில் இந்தியாவின் ஸ்கோரை விரட்டுவதற்கே ஆஸ்திரேலிய அணி திணறிவிடும். இதனால் இன்றைய போட்டியில் மிகப்பெரிய விருந்து ரசிகர்களுக்கு காத்துள்ளது.


Click it and Unblock the Notifications