Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை பிரச்சினை.. இந்தியாவுக்கு செக் வைக்கப்படுகிறதா? பாகிஸ்தானின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எங்கு நடைபெறுவது என்ற பிரச்சினை குறித்து பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜிம் சேதி புதிய கருத்தை கூறியுள்ளார். இந்த முறை ஆசிய நாடுகளின் ஆதரவையும் கோரி வருகிறார்.

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் தான் தொகுத்து வழங்கவுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பையையும் 50 ஓவர் வடிவத்தில் நடத்தவுள்ளனர்.

ஆனால் இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவதில் சிக்கலை உருவாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பை வெளியிட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடக்காது என அறிவித்தார்.

 ஜெய்ஷா அறிவிப்பு

ஜெய்ஷா அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என்றும் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும் அறிவித்தார். மேலும் ஆசிய கோப்பை போட்டிகளை வேறு நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறினார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பாகிஸ்தான் வாரியம், எப்படியாவது போட்டியை நடத்தியே தீர வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர்.

 பாகிஸ்தான் தடாலடி

பாகிஸ்தான் தடாலடி

சமீபத்தில் ஆசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜம் சேதி, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணி வராது என பகிரங்கமாக அறிவித்தார். இதனால் கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. இந்நிலையில் அடுத்த கூட்டம் குறித்து நஜம் சேதி கருத்து கூறியுள்ளார்.

நஜம் சேதி பேச்சு

நஜம் சேதி பேச்சு

அதில், ஆசிய கவுன்சிலில் உள்ள மற்ற நாடுகளெல்லாம் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பது முக்கியமாக உள்ளது. மற்ற கவுன்சில்களில் ஆதரவுகளை கேட்டு வருகிறோம், அவர்களிடம் பாகிஸ்தானின் பிரச்சினை என்னவென்பது குறித்து தெளிவாக கூறியுள்ளோம். ஆனால் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ள பண பலம் பெரிதாக உள்ளது. உலக கிரிக்கெட்டில் பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அதிகாரம் இருக்கிறது.

இலங்கையில் போட்டி

இலங்கையில் போட்டி

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் உள்ளேன். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா பங்கேற்காதா என்பது இறுதியில் அறிவிக்கப்படும் என நஜம் சேதி கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்திக்கொள்ளலாம், ஆனால் இந்தியாவின் போட்டிகளை மட்டும் அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த வேண்டும் என்ற யோசனையை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, March 18, 2023, 22:00 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+