WATCH: ஒரேயொரு ரசிகர்... ஒட்டுமொத்த போட்டியும் நிறுத்தம்.. மைதானத்தில் பதறி ஓடிய பாதுகாவலர்கள்
லண்டன்: இங்கிலாந்து, நியூசிலாந்து மோதிய லீக் போட்டியில் மைதானத்தில் ஆடைகளின்றி ஓடி வந்த ரசிகர் ஒருவர், பல்டியடித்து சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக கோப்பை லீக் போட்டியில் மோதின. போட்டியில் இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.
தற்போது அந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது, போட்டியின் குறுக்கே நடுவே ரசிகர் ஒருவர் ஆடைகளின்றி நிர்வாணமாக மைதானத்துக்குள் ஓடிவந்தார்.
ரசிகர் பல்டி
ஓடி வந்த வேகத்தில் நேராக பிட்சுக்குள் சென்றார். அங்கேயே பல்டியடித்த அந்த ரசிகர் தமது சேட்டைகள் மூலம் கவனத்தை ஈர்த்தார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் யாரின் பிடியிலும் அகப்படாமல் வலம் வந்தார். அவரின் செய்கையால் போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.

வீரர்கள் முழிப்பு
மைதானத்தில் இருந்த இரு அணிகளின் வீரர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தனர். ரசிகரின் இந்த செயலால், அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.

டிமிக்கி கொடுத்த ரசிகர்
மைதானத்துக்குள் வலம் வந்த அவரை பாதுகாவலர்கள் பிடிக்க முனைந்தனர். ஆனால், அதற்கெல்லாம் சிக்காத அந்த ரசிகர் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடினார். ஆனாலும், அவரை பின் தொடர்ந்து பாதுகாவலர்கள் சென்றனர்.

வைரலான வீடியோ
ஒரு வழியாக, பின்னாலேயே துரத்திச் சென்ற பாதுகாவலர்கள், வளையம் போன்று சுற்றி நின்று அவரை பிடித்துச் சென்றனர். பின்னர் மைதானத்தில் இருந்து அவர் அகற்றப்பட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications