சிவம் துபே கதை ஓவர்.. இனி இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காது பாஸ்.. சோலியை முடித்த நமன் திர்!
கிறிஸ்ட்சர்ச்: இந்திய டி20 அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரான சிவம் துபேவுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் இருவருமே பேட்டிங் ஆல்ரவுண்டர்களாக உருவாகி வரும் சூழலில், இனியும் சிவம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றே பேச்சுகள் எழுந்துள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி செய்த மிகப்பெரிய சேஸ் இதுதான். இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் மற்றும் நமன் திர் ஆகியோரின் பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கி சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்களையும், நமன் திர் 15 பந்துகளில் 42 ரன்களையும் விளாசி இருக்கின்றனர்.
சஞ்சு சாம்சனின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது என்றாலும், இளம் வீரரான நமன் திர் ஆட்டம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நமன் திர் மட்டும் ஸ்பின்னில் இன்னும் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தினால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும். ஒரு போட்டிக்கு 2 ஓவர்களையாவது வீசக் கூடிய வகையில் நமன் திர் தயாராக வேண்டும்.
அதேபோல் நிதிஷ் குமார் ரெட்டியும் ஆல்ரவுண்டராக உருவாகிவிட்டார். அவரால் அத்தனை போட்டிகளிலும் 2 முதல் 4 ஓவர்களை வீச முடிகிறது. 135 கிமீ வேகத்தை வீசுவதோடு, அவரிடம் நல்ல ஸ்விங்கும் இருக்கிறது. அவரின் பேட்டிங்கில் எந்தவித குறையும் சொல்ல முடியாத வகையில் தான் ஆடி வருகிறார். இதனால் சிவம் துபே மீண்டும் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் சிவம் துபேவின் அதிரடி பேட்டிங்கை நமன் திர்ரும், பவுலிங்கை நிதிஷ் குமார் ரெட்டியும் கொடுத்துவிடுகின்றனர். நமன் திர்ரால் சிவம் துபேவுக்கு நிகரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது. இதனால் இன்னும் ஒரு சில தொடர்களோடு இந்திய அணியில் இருந்து சிவம் துபே கழற்றிவிடப்பட கூடும் என்றும் சில விவாதம் தொடங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
