Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியிலேயே அதிர்ச்சி.. இலங்கையை நசுக்கிய கத்துக்குட்டி நமிபியா.. ரன் ரேட்டும் அடி வாங்கியது

ஜீலாங் : டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான இலங்கை அணி , கத்துக்குட்டி அணியான நமிபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, டி20 உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய போட்டியில் இலங்கை மிகப் பெரிய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் கத்துக்குட்டி அணியுடனான நமிபியாவை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசியது

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய நமிபியா அணியின் மைக்கேல் மற்றும் திவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது. லோப்டி ஈட்டன் பொறுப்புடன் விளையாடி 12 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, பவர்பிளே முடிவில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டை நமிபியா அணி இழந்தது. நடுவரிசையில் ஸ்டிபன் பார்ட் மற்றும் கேப்டன் எராஸ்மஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். ஸ்டிபன் 26 ரன்கள் எடுத்த நிலையில், பெரிய ஷாட் அடிக்க முயன்று எராஸ்மஸ் 20 ரன்களில் வெளியேறினார்.

கடைசியில் அதிரடி

கடைசியில் அதிரடி

ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய போது, அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பிராலிங், 28 பந்தில் 44 ரன்கள் விளாச, ஸ்மிட் 16 பந்தில் 31 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் நமிபியா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணி 68 ரன்களை விளாசியது. இலங்கை வீரர் பிரமோத் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. குசேல் மெண்டிஸ் 6 ரன்களிலும், நிசாங்கா 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் 4வது ஓவரில் இலங்கைக்கு மரண அடி விழுந்தது. சிகாங்கோ வீசிய ஒரே ஓவரில் குணதிலகா, நிசாங்கா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

108 ரன்களில் அவுட்

108 ரன்களில் அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்சா 20 ரன்களும், கேப்டன் சனாகா 29 ரன்களும் எடுத்து வெளியேற, இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 4 ரன்களிலும், கருணரத்னே 5 ரன்களிலும் வெளியேற, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் 19வது ஓவர் முடிவில் இலங்கை அணி 108 ரன்களில் சுருண்டு, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இலங்கை ரன் ரேட் மைனசுக்கு சென்றது.

Story first published: Sunday, October 16, 2022, 21:07 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+