For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நமிபியாவின் வெற்றியால் இந்தியாவுக்கு ஆபத்து.. இனி கொஞ்சம் கூட அசர முடியாது.. முழு விவரம் இதோ

மெல்போர்ன்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை நமிபியா அணி வென்றதால், இந்திய அணிக்கு கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் முதலில் தகுதி சுற்று நடைபெறும். இதில் குரூப் ஏ வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, யு ஏ இ அணிகள் மோதுகின்றன.

இதே போன்று குரூப் பியில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 4 அணிகள் மோதுகின்றன.

குரூப்

குரூப்

இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சுற்றுக்கு செல்லும். இந்த சுற்றில் , ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு செல்லும். தற்போது சூப்பர் 12 சுற்றில், குரூப் 2 வில் இந்திய அணி, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளும் மோதுகிறது. எஞ்சிய போட்டியில் முதல் சுற்றில் ஏ பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடனும் மோத உள்ளது.

நமிபியா வெற்றி எதிரொலி

நமிபியா வெற்றி எதிரொலி

உலக கோப்பை தொடர் தொடங்குவதறகு முன் ஏ பிரிவில் இலங்கை முதலிடமும், நமிபியா 2வது இடமும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்தியா நமிபியாவுடன் மோதும் என கணிக்கப்பட்டது. தற்போது இலங்கை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால், அந்த அணி முதல் சுற்றில் 2வது இடத்தை பிடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

கடும் சவால்

கடும் சவால்

நமிபியாவுடன் தோல்வியை தழுவியதால் இலங்கையை குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த ஆசிய கோப்பையில் கூட இலங்கை அணி முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானிடம் தோற்ற பிறகு, எஞ்சிய அனைத்து போட்டியிலும் வென்று ஆசிய கோப்பையை வென்றது. இதனால், பலமான இலங்கை அணி, இந்தியாவுடன் இடம்பெறும் வகையில் குரூப் அமைக்கப்பட்டுள்ளது.

குரூப் ஆஃப் டெத்

குரூப் ஆஃப் டெத்

அடுத்தது பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி, பலம் வாய்ந்த அணிகளான பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோதும். இதனை ஆங்கிலத்தில் குரூப் ஆப் டெத் என்பார்கள். இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட உங்களுக்கு சிரமம் அதிகரிக்கும். இதனால் இந்தியாவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது.

Story first published: Sunday, October 16, 2022, 21:08 [IST]
Other articles published on Oct 16, 2022
English summary
Namibia win making tough challenges for indian team in t20 world cup 2022 நமிபியாவின் வெற்றியால் இந்தியாவுக்கு ஆபத்து.. இனி கொஞ்சம் கூட அசர முடியாது.. முழு விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+