Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்த எதிர்பார்ப்பும் போச்சு.. இந்தியா - நியூசி, 3வது டி20 போட்டி நடக்குமா?? வானிலை நிலவரம் என்ன??

நேப்பியர்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நடைபெறுமா என்பதை தீர்மானிக்கும் வானிலை நிலவரம் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

முதல் டி20 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

தொடரில் முன்னிலை

தொடரில் முன்னிலை

நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமாக வீழ்த்தியிருந்தது. எனவே தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டி நேப்பியர் நகரத்தில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தோற்கும் அசிங்கத்தை தவிர்ப்பதற்காக நியூசிலாந்து அணி கடும் முணைப்புடன் களமிறங்கவுள்ளது. முதல் போட்டியை முழுவதுமாக நிறுத்திய மழையானது, 2வது போட்டியில் குறுக்கிட்ட போதும் சிறிது நேரத்திலேயே விலகி போட்டியை முழுவதுமாக நடக்க அனுமதித்தது.

வானிலை நிலவரம்

வானிலை நிலவரம்

இந்நிலையில் 3வது போட்டிக்கான வானிலை நிலவரம் தெரியவந்துள்ளது. நேப்பியர் நகரத்தில் தற்போது இருந்தே வானிலை சற்று மோசமாக இருந்து வருகிறது. போட்டி நாளான நாளை காலை மழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் மாலையில் இருந்து இரவு வரை 70% சதவீதம் வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது. 3வது டி20 போட்டியும் அதே நேரத்தில் தான் நடைபெறவுள்ளது.

மற்றொரு பிரச்சினை

மற்றொரு பிரச்சினை

இரவு 11.30 மணி வரை மழைக்கான வாய்ப்பு அதிமாக இருப்பதால், இந்த போட்டியும் பெரும் அளவில் பாதிப்படையும் எனத்தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் 20 கிமீ வேகம் வரை ஈரக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, November 21, 2022, 22:15 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+