Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை பற்றி அப்படி நினைச்சா.. இங்கிலாந்து அணிக்கு மிரட்டல்.. 17 வயது பாக். குட்டித்தம்பி வாய் சவடால்

கராச்சி : இங்கிலாந்து நாட்டுக்கு இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது பாகிஸ்தான் அணி.

கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் நடக்க உள்ளது. இந்த தொடர் பற்றி பாகிஸ்தான் அணியின் மிக இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் இங்கிலாந்து அணிக்கு மிரட்டல் விடும் வகையில் பேசினார். களத்தில் தன் பந்துவீச்சின் மூலம் பேசாமல், வாயிலேயே மிரட்டல் விட்டு இருக்கிறார் இந்த 17 வயது பாலகன்.

இங்கிலாந்தில் கிரிக்கெட்

இங்கிலாந்தில் கிரிக்கெட்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் விளையாட்டு முற்றிலும் முடங்கி உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே முதல் அணியாக கிரிக்கெட் தொடர்களை வரிசையாக நடத்த முன் வந்துள்ளது. முதலில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும், தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனும் கிரிக்கெட் தொடர்களில் இங்கிலாந்து அணி ஆட உள்ளது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து கிளம்ப உள்ளது. டெஸ்ட் அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்து நாட்டுக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஆஸி.வில் அறிமுகம்

ஆஸி.வில் அறிமுகம்

17 வயதே ஆன நசீம் ஷா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னர் பாகிஸ்தான் மண்ணில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார்.

அந்த தொடரில் அவர் ஒரே இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி மிக இளம் வயதில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார். அப்போது முதல் பேட்டிகளில் வாய் சவடால் விட்டு வருகிறார் நசீம் ஷா.

கோலியை கண்டு அஞ்சமாட்டேன்

கோலியை கண்டு அஞ்சமாட்டேன்

கடந்த சில நாட்கள் முன்பு தான் விராட் கோலியை கண்டு பயப்பட மாட்டேன். அவருக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவேன் என கூறி இருந்தார். அப்போது அது இந்திய ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது. அவர் களத்தில் தன்னை நிரூபிக்காமல் வாயில் பேசுவதாக பலரும் கூறினர்.

பெரிய நஷ்டம் ஆயிடும்

பெரிய நஷ்டம் ஆயிடும்

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், தன்னை சின்னப் பையன் என கருதினால், அது அவர்களுக்கு பெரிய நஷ்டம் என இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை விடும் தொனியில் பதில் கூறி இருக்கிறார்.

வயது ஒரு விஷயமே இல்லை

வயது ஒரு விஷயமே இல்லை

மேலும், வயது ஒரு விஷயமே இல்லை. பந்துவீச்சு தான் விஷயம். எனவே, அவர்கள் தன்னை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளார். இத்தனைக்கும் இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் தவிர மற்றவர்கள் பெயர்கள் கூட தனக்கு தெரியாது என்றும் கூறி உள்ளார்.

4 போட்டிகளில் ஆடியவர்

4 போட்டிகளில் ஆடியவர்

நசீம் ஷா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 13 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதில் சிறந்த பேட்ஸ்மேன்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வலுவான அணியாக இருக்கும் நிலையில், நசீம் ஷா என்ன செய்கிறார் என பார்க்கலாம்.

Story first published: Thursday, June 18, 2020, 13:12 [IST]
Other articles published on Jun 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+