Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை 3வது மேட்சில் நிச்சயம் வீழ்த்த முடியும்.. எப்படி? - நாசர் ஹுசைன் மூளையில் எரிந்த "பல்ப்"

லண்டன்: இங்கிலாந்தால் மீண்டு வந்து இந்திய அணியை நிச்சயம் வீழ்த்த முடியும் என்றும் அதற்கான காரணத்தையும் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

அந்த டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் காலை வரை இங்கிலாந்து தான் வெற்றிப் பெறும் என்று நம்பியிருந்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது இந்தியா.

 சிராஜின் ஆக்ரோஷமும்

சிராஜின் ஆக்ரோஷமும்

9வது விக்கெட்டுக்கு பும்ரா - ஷமியின் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், முகமது சிராஜின் ஆக்ரோஷமான பவுலிங்கும் இந்திய அணிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் சர்பிரைஸ் வெற்றியைத் தேடித் தந்தது. அதுமட்டுமின்றி, பும்ரா - ஆண்டர்சன் இடையே நடந்த வார்த்தை மோதல், கோலி - ஆண்டர்சன் இடையே நிகழ்ந்த வார்த்தை மோதல் என்று, பல சுவாரஸ்ய அனல் பறக்கும் சம்பவங்கள் இரண்டாம் போட்டியில் இந்நிலையில் வரும் 25ம் தேதி லீட்ஸின் ஹெட்டிங்லேவில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. எனினும், இங்கிலாந்து வீரர்கள் தற்போது அவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். விரைவில், அவர்கள் மீண்டும் அணிக்குள் திரும்பி பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்கள்.

 குழந்தையுடன் கோலி

குழந்தையுடன் கோலி

இந்திய அணி, இங்கிலாந்து போகும் போதே குடும்பத்த்துடன் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தான் கிளம்பினர். இதனால், அவர்களும் தற்போது குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தனது கைக்குழந்தையுடன் இங்கிலாந்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் போட்டி தவிர, மீதி நேரத்தில் மனைவி அனுஷ்கா மற்றும் குழந்தையை பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரம் போதவில்லை. எனினும், அனைவரும் மீண்டும் பயிற்சி களத்திற்கு திரும்ப உள்ளனர்.

 சீர்குலைந்த நம்பிக்கை

சீர்குலைந்த நம்பிக்கை

2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா வென்றிருந்தாலும் அது முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. ஐந்தாவது நாளின் காலைப் பொழுது வரை இங்கிலாந்து தான் வெற்றிப் பெறும் சூழல் நிலவியது. ஆனால், பும்ரா - ஷமி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் அடிப்பார்கள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. டிக்ளேர் செய்யும் அளவுக்கு, இந்தியா 2வது இன்னிங்ஸில் வலிமையான நிலைக்கு செல்லும் என்றும் எவருமே எதிர்பார்க்கவில்லை. அந்த 9வது விக்கெட் மொமண்ட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இங்கிலாந்து வீரர்களின் நம்பிக்கையை சீர்குலைத்தது. இந்திய வீரர்களுக்கு உச்சபட்ச எனர்ஜியை வாரிக் கொடுத்தது. இந்தியாவும் வெற்றிப் பெற்றது.

 மிடில் ஆர்டர் தலைவலி

மிடில் ஆர்டர் தலைவலி

சற்று யோசித்துப் பார்த்தால், இந்தியாவும் இங்கிலாந்தை போன்று வலிமை இழந்து தான் இருக்கிறது. மோசமான பேட்டிங் இந்தியாவின் பெரிய பிரச்சனையாக உள்ளது. இங்கு மோசமான பேட்டிங் என்று சொல்வது மிடில் ஆர்டரை தான். புஜாரா, கோலி, ரஹானே என்று மூவரும் சொதப்பி வருகிறார்கள். 2வது இன்னிங்ஸில் ரஹானே அரைசதம் அடித்தாலும், புஜாரா 45 ரன்கள் அடித்திருந்தாலும், அவர்கள் இருவரும் ஃபார்மில் இருக்கிறார்களா என்பது மிகப்பெரிய சந்தேகமே.

 வேகப் பந்துவீச்சு

வேகப் பந்துவீச்சு

இங்கிலாந்தில் எப்படி ரூட் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்கிறாரோ, அது போல் இந்தியாவில் ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் தான் சிறப்பாக விளையாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் இருவர் மட்டும் தான் விளையாடுகிறார்கள். மற்றபடி, இந்தியாவும் சரி, இங்கிலாந்தும் சரி வெற்றிப் பெற வேகப்பந்துவீச்சையே நம்பி உள்ளன. அந்த அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அணிக்கே வெற்றி என்பது தான் நிலை.

 இங்கிலாந்து மோசமாக விளையாடல

இங்கிலாந்து மோசமாக விளையாடல

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில், "பல பந்து வீச்சாளர்கள் காயமடைந்து இருப்பதும், இங்கிலாந்து பேட்டிங் செய்யும் விதமும் மோசமாக இருப்பதுமே அணியின் பின்னடைவுக்கு காரணம். ஆனால், நான் மீண்டும் சொல்கிறேன், 2வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் காலை வரை, இங்கிலாந்தே போட்டியை வெல்லும் நிலையில் இருந்தது. ஆகையால், இந்த போட்டியில் இங்கிலாந்து மோசமாக விளையாடியது என்று பொதுவாக கூறிவிட முடியாது.

 இந்தியாவை வீழ்த்தலாம்

இந்தியாவை வீழ்த்தலாம்

2வது இன்னிங்ஸில், இங்கிலாந்துக்கு எதிராக அனைத்தும் சென்றுவிட்டன. ஆனால், அது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஹைலைட். ஐந்து நாட்கள் முழுவதும் விளையாட்டு அடிக்கடி மாறலாம். இது ஹெட்டிங்லேவில் வித்தியாசமாக இருக்கலாம். இந்த ஆண்டு பிட்ச் மிகவும் ஃபிளாட் ஆக இருப்பதாக தெரிகிறது. ஆனால் இரண்டு அணிகளின் பேட்டிங்கும் மோசமாக இருப்பதாகவே நான் பார்க்கிறேன். ஆகையால், இங்கிலாந்து இந்த டெஸ்ட் தொடரை இழக்கும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இரு அணியின் பேட்டிங்கும் சொதப்பலாக இருப்பதால், இங்கிலாந்து மீண்டு வந்து இந்தியாவை நிச்சயம் வீழ்த்த முடியும் என்று உறுதியாக கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

 பாசிட்டிவ் வைப்

பாசிட்டிவ் வைப்

ஹுசைன் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இரு அணிகளின் பேட்டிங்கும் நிலைத்தன்மை இன்றி உள்ளது. ஸோ, இங்கிலாந்து நினைத்தால் நிச்சயம் பவுன்ஸ் பேக் ஆக முடியும். ஆனால், இந்தியா பக்கம் உள்ள சாதகம் என்னவெனில், இங்கிலாந்தை சற்று ஆக்ரோஷமாக அடித்து வீழ்த்தியுள்ளது. இதனால், அனைத்து வீரர்களிடம் பாசிட்டிவ் வைப் தாறுமாறாக பரவியுள்ளது. இங்கிலாந்தை நிச்சயம் வீழ்த்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். நம்பிவிட்டனர். இந்த நம்பிக்கை மீண்டும் இங்கிலாந்துக்கு குடைச்சலைத் தான் கொடுக்கும். அதை ஓவர்கம் பண்ணுவது தான் இங்கிலாந்து சந்திக்கும் பெரும் சவாலாக அடுத்த 3 போட்டிகளிலும் இருக்கப் போகிறது.

Story first published: Friday, August 20, 2021, 20:50 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+