அவர் இந்திய டீம்ல இல்ல.. இங்கிலாந்து செமயா அடிக்கலாம் - நாசர் ஹுசைன் டிப்ஸ்
இங்கிலாந்து: இந்திய அணியில் ஜடேஜா விளையாடாத சூழலை, இங்கிலாந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று முன்னாள் இங்கி., கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக ஒத்துழைப்பதால், இங்கிலாந்து எந்தவித பிரஷரும் இன்றி விளையாடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்துக்கு சாதகமான அம்சங்கள் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேசியுள்ளார்.

இங்கிலாந்தின் வாவ் ஆட்டத்திறன்
இதுகுறித்து அவர் டெய்லி மெய்ல் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், "இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வூட் வெளிநாடுகளில் இங்கிலாந்தின் ஆட்டத்திறனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

சிறப்பான தொடக்கம்
எனினும், சந்தேகத்துக்கு இடமின்றி ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலும், இந்தியாவை அதன் மண்ணிலும் எதிர்த்து ஆடுவது என்பது சவால் நிறைந்த ஒன்று. இந்தியாவுக்கெதிரான தொடரில் இங்கிலாந்து சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டும்.

ஜடேஜா இல்லாத இந்தியா
இந்தியாவில் ரவீந்திர ஜடேஜா விளையாடாதது அந்த அணிக்கு மாபெரும் இழப்பாகும். இலங்கையில், லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களிடம் இங்கிலாந்து தடுமாறியதை நாம் பார்த்தோம். ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக நிறைய ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருப்பதால், சென்னை பிட்சை பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார். அவர் இந்திய அணியில் இல்லாத சூழலை, இங்கிலாந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

2-1 என ஜெயிக்கலாம்
இத்தொடரை இந்தியா 2-1 என்று வெல்லலாம். ஆனால், நீங்கள் இந்த இங்கிலாந்து அணியை அவ்வளவு சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. எதிர்பாராத ஆச்சர்யங்கள் நிகழலாம்" என்று நாசர் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications