Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தரமான பவுலிங்.. கோலிக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. இனியும் திணறுவார்" - நாசர் ஹுசைன் நக்கல்

லண்டன்: இந்திய கேப்டன் விராட் கோலியின் மோசமான ஃபார்ம், இந்த தொடரில் மிகவும் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாகும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றுது. இதில், இந்திய அணி நான்காவது நாளிலேயே தோல்வி அடைந்தது

இத்தொடரில் ரொம்பவே தடுமாறி வருபவர் கேப்டன் விராட் கோலி தான். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை, ரசிகர்களுக்கும் தெரியவில்லை.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களும் எடுத்தனர். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று சிங்கிள் டிஜிட் பட்டியல் நீண்டுக் கொண்டே சென்றன. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, சதம் அடித்து போனால் போகிறது என்று 121 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடிது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

தொடரும் ஸ்லிப் சோகம்

தொடரும் ஸ்லிப் சோகம்

இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் முதல் அரைசதம் இதுவேயாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வரும் கோலி, உண்மையில் கிரிக்கெட் விளையாடுவதையே மறந்தவர் போல் தான் ஆடி வருகிறார். ஆண்டர்சனிடம் இருமுறை, ஓலே ராபின்சனிடம் இருமுறை, சாம் கர்ரனிடம் ஒருமுறை என்று இந்த தொடரில் தனது விக்கெட்டுகளை ஸ்லிப்பிலேயே கொடுத்து அவுட்டாகி இருக்கிறார். இந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங்கில் என்ன பிரச்சனை என்பது குறித்து, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், டெய்லி மெயிலுக்கு தான் எழுதும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர பந்துவீச்சு

உயர்தர பந்துவீச்சு

அதில், "எந்த பந்துகளை தவிர்க்க வேண்டுமோ, அந்த பந்துகளில் எல்லாம் கோலி விளையாடியுள்ளார். அவரிடம் டெக்னிக்களாக சில பிரச்சனைகள் உள்ளன. அதாவது, பேக் ஃபூட் எடுத்து ஆடுவதில், கால்களை பின்னோக்கி கொண்டு வந்து ஆடுவதில், அதனை சரியான பொசிஷனில் நிலைநிறுத்துவதில் கோலி தடுமாறுகிறார். மேலும் அவர் ஆண்டர்சன் மற்றும் ராபின்சனின் பந்துகளை துல்லியமாக பேக் ஃபூட் எடுத்து ஆடுவதில் சிரமப்படுகிறார். அந்த பந்துகளை விளையாடுவதா அல்லது விடுவதா என்று அவருக்கே தெரியவில்லை. இன் ஸ்விங் பந்துகள் வரும் போது, அவருக்கு சுத்தமாக என்ன செய்வதென்றே தெரியவில்லை. இங்கிலாந்தும் அணி உயர்தர பந்துவீச்சு கொண்டது. எனவே எதிர்வரும் போட்டிகளிலும் அது அவருக்கு எளிதாக இருக்காது

கோல்டன் டக்

கோல்டன் டக்

அவர் மூன்றாவது நாளில் நன்றாக விளையாடினார். பழைய பந்துகளை தொடாமல் அவர் எளிதாக கடந்துவிட்டார். பந்துகளை அவர் எளிதாக லீவ் செய்தார். ஆனால் புதிய பந்தை அப்படி லீவ் செய்வது கடினம், ஏனெனில் புதிய பந்துகள் ,மெதுவாக தான் ஸ்விங் ஆகும். இதனால், நான்காவது நாளில் கோலி தான் எப்போதும் அவுட்டாவது போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நாட்டிங்கமில் ஆண்டர்சனுக்கு எதிராக கோல்டன் டக் ஆகி தொடரைத் தொடங்கிய பிறகு, கோலி ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆவரேஜ் 24.80. அதிகபட்ச ஸ்கோர் 55. அவ்வளவு தான்.

Story first published: Monday, August 30, 2021, 18:14 [IST]
Other articles published on Aug 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+