
நாசருக்குப் பிடித்த நாலு பேர்
டெய்லி மெயில் இதழுடன் நாசர் ஹூசேன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி எந்தெந்த வீரர்கள் உங்களைக் கவர்ந்தனர். அவர்களில் யாருடைய ஆட்டத்தைப் பார்க்க நீங்கள் அதிகம் விரும்புவீர்கள் என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உடனடியாக நாசர் கொடுத்த பதில் எனக்குப் பிடித்தவர்கள் நான்கு வீரர்கள்தான் என்பதே.

நம்பர் 1 விராட் கோலி
முதல் வீரர் விராட் கோலி. 96 டெஸ்ட் போட்டிகளை ஆடி விட்டார். அருமையான வீரர், அருமையான கேப்டன். ஒரு நாள் போட்டிகளில் நன்றாக சேஸ் செய்யக் கூடியவர். எந்த ஸ்கோர் எடுத்தாலும் சேஸ் செய்து விடுவார். புள்ளிவிவரத்தைப் பார்த்து ஆடக் கூடியவர் அல்ல கோலி. அதைப் பற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. வெற்றியா தோல்வியா என்பதை மட்டுமே அவர் பார்ப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

சயீத் அன்வரைப் பிடிக்கும்
அடுத்து சயீத் அன்வர். பாகிஸ்தானுக்குக் கிடைத்த நல்லதொரு வீரர். 55 டெஸ்ட், 247 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். எலிகன்ட் ஆன வீரர். அருமையாக ஆப் சைட் ஆடக் கூடியவர். சயீத் அன்வர் அருமையான ஆட்டக்காரர். கிரிக்கெட்டில் 1989 முதல் 2003 வரை ஆடி 13,000 ரனகளைக் குவித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக அவரது 194 ரன்கள் ரொம்ப காலத்திற்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. 2003 உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற்றார் என்றும் ஹூசேன் கூறியுள்ளார்.

சூப்பர் பிரையன் லாரா
நாசர் ஹுசேனின் பாராட்டைப் பெற்ற 3வது வீரர் பிரையன் லாரா. இவரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. எதிரணியினராலும் விரும்பப்பட்ட ஒரு அருமையான அதிரடி பேட்ஸ்மேன். நாசர் ஹூசேனும் இவருடைய தீவிர ரசிகர்தான். லாராவை அவுட்டாக்குவது எளிதல்ல.அவரை பற்றி கணிக்கவே முடியாது. அவருக்கு எதிராக நான் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்ததில்லை. ஆனால் மைக் ஆதர்டன்தான் ரொம்ப கஷ்டப்பட்டார் லாராவிடம் என்றுள்ளார் ஹூசேன்.

எப்பவுமே அதிரடி பேட்டிங்
லாராவுக்காக அவர் போட்ட பீல்டிங் வியூகங்கள் பலமுறை கைவிட்டுள்ளன. அந்த அளவுக்கு கணிக்க முடியாத ஒரு வீரர் லாரா. எப்போதுமே மைக் வைக்கும் வியூகத்தை உடைப்பதே லாராவின் வேலையாக இருக்கும். கிடைக்கும் கேப்பில் எல்லாம் பந்துகளைப் பறக்க விடுபவர் லாரா. அந்த வகையில் லாராவின் விளையாட்டைப் பார்க்க எப்போதுமே எனக்குப் பிடிக்கும் என்று கூறியுள்ளார் ஹூசேன்.

டேவிட் கோவர்
எனது சிறு வயது ஹீரோ என்றால் அது டேவிட் கோவர்தான். அவரது ஆட்டத்தை ரசிப்பதே ஒரு விருந்து போல இருக்கும். லீசெஸ்டர்ஷயருக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் இன்று வரை எனது கண்ணில் உள்ளது என்றார் நாசர் ஹூசேன். டேவிட் கோவர், இங்கிலாந்து அணியின் மகத்தான வீரர்களில் ஒருவர். 117 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 1978 முதல் 1992 வரை அவர் இங்கிலாந்துக்காக ஆடி 8231 ரன்களைக் குவித்தவர்.

சச்சினைச் சொல்லலையே
என்னதான் விராட் கோலியைப் பிடித்திருக்கிறது என்று நாசர் ஹூசேன் கூறினாலும் கூட இந்திய ரசிகர்களால் கடவுள் என மதிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் குறித்து எதுவும் சொல்லவில்லை. அதேபோல இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவரான எம்எஸ் தோனி குறித்தும் ஒரு வார்த்தை சொல்லாமல் விட்டு விட்டார் நாசர் ஹூசேன். அது ஏனோ!


Click it and Unblock the Notifications











