Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் தான் போட்டி.. இந்திய அணியை கேவலமாக விமர்சித்த நாசர் ஹூசேன்

Recommended Video

இந்திய அணியை விமர்சித்த நாசர் ஹூசேன்- வீடியோ

லண்டன்: இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹூசேன் இந்திய வீரர்கள் டெஸ்ட் தொடரில் தடுமாறி வருவதையடுத்து, தற்போது ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் தான் போட்டி (men against boys) என கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல், 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் 0-4 என டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்திய அணியை மொத்தமாக “வைட்வாஷ்” செய்ய வேண்டும் என கூறியுள்ளார் ஹுசைன்.

nasser hussain says its men against boys now


இந்திய அணி முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு இணையாக ஆடியது. என்றாலும், பேட்டிங்கில் சொதப்பியதால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில், அனைத்து விதத்திலும் மோசமாக செயல்பட்டு 159 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த தோல்விக்கு பின் ஹூசேன் கூறும்போது இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. அப்படியென்றால், இந்த தொடர் கடுமையான போட்டியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஆண்களுக்கும், சிறுவர்களுக்குமான போட்டியாக இது இருக்கிறது. இந்திய அணி தவறான திசையில் செல்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி மேலும் மேலும் சிறப்பாக ஆட வேண்டும். இந்தியாவில் 4-0 என டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்க வேண்டும். கடைசி வரை சென்று அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார் ஹூசேன்.

ஒருவேளை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழக்க நேரிடும். அதே சமயம், மூன்றாவது போட்டிக்கான அணியில் பெரிய மாற்றங்களும் செய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஒன்றிரண்டு வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாடும் அணியில் மாறுவார்கள் என்பதால், இந்திய வீரர்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே வழி பிறக்கும். இது போன்ற விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவும் முடியும்.






Story first published: Tuesday, August 14, 2018, 8:56 [IST]
Other articles published on Aug 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+