Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் மோசமான ஃபார்ம்.. அந்த சீனியர் வீரரை அழைத்தே ஆகனும்.. இல்லைனா.. முன்னாள் வீரர் அட்வைஸ்!

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவில் இருந்து ஒரு முக்கிய வீரரை அழைத்தே ஆக வேண்டும் என முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

144 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் கோப்பையை நியூசிலாந்து தட்டிச்சென்றது.

பொய்யான நம்பிக்கை

பொய்யான நம்பிக்கை

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு வீரர்கள் தேர்வே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த பிட்ச்-ல் மூன்றே மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இதற்கு காரணம் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா என 3 சீனியர் வீரர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யானது.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

முக்கியமாக இந்தியாவின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பும்ரா கடந்த ஐபிஎல் தொடரிலும் சரிவர விக்கெட் எடுக்கவில்லை. இருப்பினும் இந்திய அணி அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அவர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்-ல் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் திரும்பினார். இதனால் அவர் தற்போது நல்ல ஃபார்மில் இல்லை, அவரை சிறிது நாட்களுக்கு வெளியில் உட்காரவைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

நாசர் ஹுசைன் ஆலோசனை

நாசர் ஹுசைன் ஆலோசனை

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக புவனேஷ்வர் குமாரை அழைக்க வேண்டும் என முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புவனேஷ்வர் குமார் காய பாதிப்பில் இருந்து மீண்டிருந்தாலும், இங்கிலாந்து தொடரில் 2 அல்லது 3 போட்டிகளிலாவது விளையாட வேண்டும். அவருக்கு இங்கிலாந்து களம் நன்கு பொருந்தும். அவரை போன்ற சிறந்த பவுலரை மிஸ் செய்கிறது எனக்கூறியுள்ளார்.

சிறந்த ஃபார்ம்

சிறந்த ஃபார்ம்

ஹுசைன் கூறியதை போன்றே புவனேஷ்வர் குமாருக்கு இங்கிலாந்தில் சிறந்த புள்ளிவிவரம் உள்ளது. இதுவரை அவர் அங்கு விளையாடியுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் 2 முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புவனேஷ்வர் குமார் தற்போது ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளார். எனவே அவருக்கு இங்கிலாந்து தொடருக்காக அழைப்பு வருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, June 26, 2021, 18:50 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+