ஸ்பெஷல் பர்மிஷன்.. அவங்க ரொம்ப முக்கியம்.. 2 தமிழக வீரர்களை மலைபோல நம்பும் கோலி.. மாஸ்டர்பிளான்!
சிட்னி: இந்திய அணியில் கலக்க தொடங்கி இருக்கும் இரண்டு தமிழக வீரர்களை கேப்டன் கோலி மலை போல நம்ப தொடங்கி உள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது.
இரண்டு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டி 20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

எப்படி
இந்த நிலையில் ஒருநாள் தொடர் மற்றும் டி 20 தொடர் இரண்டிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணிக்காக பவுலிங் செய்த நடராஜன் ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்,டி 20 போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்து சாதனை செய்துள்ளார்.

நம்பிக்கை
இவர் மீது கோலி பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் என்கிறார்கள். நடராஜன் கடினமாக உழைக்கிறார்.அவர் இப்படியே ஆடினால் விரைவில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார். அவர் எங்களுக்கு நல்ல சொத்தாக இருப்பார். அவர் ஆட்டம் இப்படியே தொடர்ந்தால் உலகப் கோப்பை டி 20 தொடரில் அடுத்த வருடம் உதவியாக இருப்பார் என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.

வாஷிங்க்டன் சுந்தர்
அதேபோல் இன்னொரு தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் மீதும் கோலி பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளார். இவர் பெரிய அளவில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் மிடில் ஓவர்களை போட்டு ரன்களை கட்டுப்படுத்துகிறார். இவர் 4 ஓவர் போட்டால் 20 ரன்கள் மட்டுமே செல்கிறது. இதன் மூலம் மிடில் ஓவர்களில் ரன் செல்வது மொத்தமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

அசத்தல்
டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இவர் மிடில் ஓவர்களை வீசி சிறப்பாக ரன் செல்வதை கட்டுப்படுத்தினார். இதன் காரணமாகவே தற்போது இவரை ஆஸ்திரேலியாவில் தங்கும்படி கோலி கூறியுள்ளார். பிசிசிஐ மூலம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் அணியுடன் தங்க வைத்துள்ளார். நடராஜனும், வாஷிங்க்டன் சுந்தரும் நெட் பயிற்சியில் பவுலிங் செய்ய உள்ளனர்.

பவுலிங்
2021 டி 20 உலகக் கோப்பை இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக இவர்கள் இருவரையும் கோலி அதிகம் நம்பி உள்ளார் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் இந்திய அணியின் பவுலிங்கில் வரும் நாட்களில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications