Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.யிலேயே இருங்க.. நடராஜன் உட்பட 3 வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட "திடீர்" உத்தரவு.. என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நடராஜன் உள்ளிட்ட மூன்று இந்திய வீரர்களை டெஸ்ட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்தியா அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். 2020ம் வருடம் தமிழக வீரர் நடராஜனுக்கு மிக முக்கியமான வருடம் ஆகும்.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இதன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற நடராஜன் தற்போது அணிக்குள் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.

எப்படி

எப்படி

இந்திய அணியில் முதலில் நெட் பவுலராக மட்டுமே நடராஜன் தேர்வானார். அதன்பின் ஒருநாள், டி 20 போட்டிகளில் பவுலராக அறிமுகம் ஆனார். வருண் சக்ரவர்த்தி மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக நடராஜனுக்கு இந்திய அணிக்குள் வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் தான் அறிமுகம் ஆன ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் இரண்டிலும் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடினார். இதன் மூலம் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே நடராஜன் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

நடராஜன், வாஷிங்கன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் ஆகிய மூன்று இந்திய வீரர்களை டெஸ்ட் தொடர் முடியும் வரை ஆஸ்திரேலியாவிலேயே இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மற்றபடி ஹர்திக் பாண்டியா, சாஹல், தவான், தீபக் சாகர் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இந்தியா திரும்பி விட்டனர். நடராஜன், வாஷிங்கன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர் மூன்று பேர் மட்டும் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன்

ஏன்

இவர்கள் மூன்று பேரும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலியாவில் தாங்குவார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக இவர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே இவர்களை ஆஸ்திரேலியாவில் இறுக்கும்படி கூறியுள்ளனர்.

டெஸ்ட்

டெஸ்ட்

அதன்படி இனி வரும் நாட்களில் இவர்கள் நெட் பயிற்சியின் போது பவுலிங் செய்ய உள்ளனர். இந்திய வீரர்களுக்கு நெட் பயிற்சியின் போது இவர்கள்தான் பவுலிங் செய்வார்கள். இந்திய பவுலர்கள் யாராவது காயம் அடைந்தால், இவர்கள் மாற்று வீரர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Story first published: Sunday, December 13, 2020, 9:46 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+