Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியில் வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்றைய டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வீரர்கள்

வீரர்கள்

இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் இருவரும் அறிமுகம் ஆகியுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே நாளில் அணியில் அறிமுகம் ஆகியுள்ளனர். இளம் பவுலர்களை கொண்டு இந்திய அணி களமிறங்கி உள்ளது.

யார் ஆடுகிறார்கள்

யார் ஆடுகிறார்கள்

இன்று இந்திய அணியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரஹானே, பண்ட், ஷரத்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், சைனி, சிராஜ் ஆகியோர் இன்று இந்திய அணிக்காக களமிறங்குகிறார். முழுக்க முழுக்க இளமையான அணி இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கி உள்ளது.

மாஸ்

மாஸ்

இந்திய அணியில் இன்று நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்க என்ன காரணம் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பும்ரா, ஜடேஜா, விஹாரி, அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. இதில் விஹாரி, ஜடேஜா இருவரும் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

நீக்கம்

நீக்கம்

அஸ்வின், பும்ரா இருவரையும் அணியில் எடுப்பது தொடர்பாக நீண்ட விவாதம் நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களை இப்போது களமிறக்கினால் காயம் பெரிதாகும். அது இவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

சாகா

சாகா

முறைப்படி இன்று சாகாவை கூடுதலாக இறக்கி இருக்க வேண்டும். ஆனால் ரஹானே 5 பவுலர்கள் உடன் களமிறங்கும் கேப்டன். அதேபோல் நடராஜன் பும்ராவிற்கு இணையாக பவுலிங் செய்வார். இதனால்தான் நடராஜனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்திய அணியில் 2தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இதுவே காரணம் ஆகும்.

யார்

யார்

இன்று விஹாரிக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்கி உள்ளார். ஜடேஜாவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் களமிறங்கி உள்ளார். அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கி உள்ளார். அதேபோல் பும்ராவிற்கு பதிலாக நடராஜன் களமிறங்கி உள்ளார்.

Story first published: Friday, January 15, 2021, 8:14 [IST]
Other articles published on Jan 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+