Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர்களை கழட்டி விட்ட தமிழக அணி.. நடராஜனுக்கும் வாய்ப்பு இல்லை.. வெளியான லிஸ்ட்.. பின்னணி!

சிட்னி: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் நடராஜன், அஸ்வின் உள்ளிட்ட முக்கிய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

முதல் தர போட்டிகளில் முக்கியமான தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில அணியும் இதற்காக தங்கள் மாநில வீரர்களை தயார் செய்து வருகிறது. ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் ஏற்கனவே உத்தேச அணிகளை அறிவித்துவிட்டது.

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

இந்த நிலையில், தமிழக அணியும் நேற்று இதற்கான அணி அறிவிப்பை வெளியிட்டது. பல முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நேற்று அறிவிக்கப்பட்ட தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்) ஆகிய இரண்டு முக்கிய வீரர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தனர்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

இது போக தமிழ்க அணியில் அபராஜித், இந்திரஜித், ஷாருக் கான், ஹரி நிஷாந்த், ஜெகதீசன், அருண் கார்த்திக், பிரதோஷ் ரஞ்சன் பால், எம் முகமது, சந்தீப் வாரியார், முருகன் அஸ்வின், சாயி கிஷோர், சித்தார், சூர்யபிரகாஷ், அஸ்வின் கிறிஸ்ட், சோனு யாதவ், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக், பெரியசாமி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஏன்

ஏன்

இந்த தமிழக அணியில் மூத்த தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அதேபோல் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் இடம்பெறவில்லை. முரளி விஜயும் இந்த அணியில் இடம்பெறவில்லை.

காரணம்

காரணம்

இதில் முரளி விஜய் குடும்ப காரணங்களை காரணம் காட்டி சுயமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இது போக அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் மூன்று பேரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியாவில் ஜனவரியில் நடக்கும் மீதம் உள்ள டெஸ்ட் போட்டியிலும் ஆடுவார்கள்.

முடியாது

முடியாது

இதனால் இவர்கள் தமிழகம் வந்து சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ஆட முடியாது. இதன் காரணமாகவே இவர்கள் தமிழக அணியில் இடம்பெறவில்லை. தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரண்டு மூத்த வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, December 24, 2020, 9:37 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+