Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க 3 பேர்தான் இனிமேல்.. ஆஸி. மண்ணை ஆளும் தமிழக வீரர்கள்.. குறி வைத்தது பிசிசிஐ.. பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். மூன்று தமிழக வீரர்களும் பெரிய அளவில் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் தற்போது இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் - ஷரத்துல் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்கள். இதுவரை இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடினார். மற்ற ஸ்பின் பவுலர்களை விட அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுத்தார்.

விக்கெட்

விக்கெட்

அதேபோல் பேட்டிங்கிலும் அஸ்வின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை கொடுத்தார். ஸ்மித்தை இரண்டு முறை விக்கெட் எடுத்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ஆட்டத்தை டிரா செய்தது. மற்ற பவுலர்கள் காயம் அடைந்த போதும் கூட முதுகு வலியோடு பவுலிங் செய்தது என்று அஸ்வின் மிகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.

இரண்டு வீரர்கள்

இரண்டு வீரர்கள்

இன்னொரு பக்கம் அறிமுக வீரர்கள் நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் இரண்டு பேருமே மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் 3 விக்கெட் எடுத்து பெரிய திருப்பம் கொடுத்தார். இது அவரின் அறிமுக போட்டி. தற்போது பேட்டிங்கிலும் சுந்தர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

பங்களிப்பு

பங்களிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வாஷிங்க்டன் சுந்தர் அதிரடி பேட்டிங் செய்து 35 ரன்களை எடுத்து இவரை அவுட்டாகாமல் ஆடி வருகிறார்.இன்னொரு பக்கம் தமிழக வீரர் நடராஜன் தனது அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளார். கடுமையான ஆஸ்திரேலிய பிட்சில் நடராஜன் சிறப்பாக பந்து வீசி உள்ளார்.

சிறப்பான பவுலிங்

சிறப்பான பவுலிங்

மேத்யூ வேட், மார்னஸ் என்று ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எடுத்து நடராஜன் அசத்தி உள்ளார். இந்திய அணியில் இப்படி மூன்று முக்கியமான தமிழக வீரர்கள் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் மூன்று பேருமே வரும் நாட்களில் அதிக அளவில் வாய்ப்புகளை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஒருநாள் டி 20

ஒருநாள் டி 20

ஒருநாள் மற்றும் டி 20 அணியில் நடராஜனும், டெஸ்ட் அணியில் அஸ்வினும், டெஸ்ட், டி 20 அணியில் சுந்தரும் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது பிசிசிஐ பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளது. இனி இந்திய அணியில் இவர்கள் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Sunday, January 17, 2021, 10:21 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+