Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, புஜாரா, ரஹானே.. பயிற்சியின் போதே அடுத்தடுத்து விக்கெட் .. காலி செய்த நடராஜன்.. செம சம்பவம்!

சிட்னி: இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கும் பவுலர்களை எல்லாம் பவுலிங் செய்ய சொல்லி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

பயிற்சி

பயிற்சி

இந்திய அணியில் தற்போது தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணி வீரர்களுக்கு நெட் பயிற்சியில் பவுலிங் செய்து வருகிறார். இவர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வருகிறார். வலைப்பயிற்சியில் இவர் சிறப்பாக பவுலிங் செய்வதாக நேற்றே தகவல் வந்து இருந்தது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் வலைப்பயிற்சியில் இவர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களின் பயிற்சிகளை கவனித்து வரும் கிரிக்கெட் விமர்சர்கள் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி இவர் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் விக்கெட்டுகளை வலைப்பயிற்சியில் எடுத்துள்ளார்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரஹானே, புஜாரா என்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை நடராஜன் எடுத்துள்ளார். இவர் போட்ட பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் கோலி, புஜாரா கூட திணறி உள்ளனர். ஒன்று இந்த பந்து கேட்ச் செல்வது போல சென்றுள்ளது அல்லது பந்து நேராக எல்பிடபிள்யூ போல சென்றுள்ளது.

சிறப்பு

சிறப்பு

இவர் போட்ட அனைத்து பந்துகளும் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. இந்திய அணி நம்பி இருக்கும் டாப் 3 வீரர்களின் விக்கெட்டுகளை கூட இவர் எளிதாக காலி செய்துள்ளார். இவரின் பவுலிங்கை பார்த்து இந்திய பயிற்சியாளர்கள் குழு சந்தோசத்தில் உள்ளது.

 சந்தோசம்

சந்தோசம்

வலை பயிற்சியை வைத்து ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு இவர் நன்றாக பவுலிங் போடுகிறார். இவருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, December 15, 2020, 21:23 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+