இது தெரிஞ்சு இருந்தா.. டெஸ்ட் டீம்லயும் எடுத்து இருப்போமே.. நடராஜன் செய்த காரியம்.. ஆடிப்போன கோலி!
சிட்னி: தமிழக வீரர் நடராஜன் வலைப்பயிற்சியில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இவரின் பவுலிங் பார்த்து இந்திய அணியின் தேர்வுக்குழு பெரிய அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்தியா அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற நடராஜன் தற்போது அணிக்குள் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து நடராஜன் நம்பிக்கை கொடுத்தார். அதன்பின் டி 20 தொடரில் இவர் 6 விக்கெட் எடுத்தார்.

எப்படி
இரண்டு தொடர்களிலும் நன்றாக ஆடிய நடராஜன் டெஸ்ட் தொடரில் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் தொடரில் இவர் வலைப்பயிற்சி செய்ய மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சியில் இவர் சக வீரர்களுக்கு பவுலிங் செய்வார்.

டெஸ்ட்
நடராஜன் வலைப்பயிற்சியில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இவரின் பவுலிங் பார்த்து இந்திய அணியின் தேர்வுக்குழு பெரிய அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்திய பவுலிங் பயிற்சி குழு சொன்னபடி அப்படியே இவர் பவுலிங் செய்கிறார்.

யார்க்கர்
இவருக்கு யார்க்கார் கிங் என்ற பெயர் உள்ளது. ஆனால் இவர் யார்க்கர் மட்டுமின்றி துல்லியமான பவுன்சர், ஸ்லோ பால், ஆப் சைட் பந்துகளை வரிசையாக போட்டு அசத்தி இருக்கிறார். ஷார்ட் பந்துகளை தேவையான நேரத்தில் வீசி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

வேரியேஷன்
இவரிடம் வேரியேஷன் இல்லை என்று வைக்கப்பட்ட புகார்களுக்கு வலைப்பயிற்சியில் இவர் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார். டி 20 போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றவர் என்றாலும் இவர் வலைப்பயிற்சியில் நேற்று நீண்ட நேரம் பவுலிங் செய்துள்ளார். இவரின் பவுலிங் பார்த்து கோலி, ரஹானே உள்ளிட்ட மூத்த வீரர்கள் பெரிய அளவில் ஆடிப்போய் உள்ளார்.

அணியில் எடுத்து இருக்கலாம்
இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டதே ஒரு விபத்துதான். ஆனால் நடராஜன் அணிக்குள் வந்த பின் தனது திறமையை நிரூபித்து உள்ளார். நடராஜனிடம் இவ்வளவு திறமை இருக்கிறது என்று முன்பே தெரிந்து இருந்தால், இந்திய டெஸ்ட் அணியிலும் இவர் வாய்ப்பு பெற்று இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications