Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜன் இந்திய அணியின் சொத்து.. சூப்பரா வந்துக்கிட்டு இருக்காரு..உச்சி முகர்ந்த கேப்டன் விராட் கோலி

கேன்பெரா : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் இன்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய தன்னுடைய முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களை போட்டு 30 ரன்களை கொடுத்துள்ள பௌலர் நடராஜன் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

Natarajan can be an asset for us in white ball cricket -Virat Kohli

போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, குறைந்த ஓவர்கள் வடிவங்களில் இந்திய அணியின் சொத்து நடராஜன் என்று புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த போட்டி மூலம் சர்வதேச டி20யில் தனது முதல் போட்டியை எதிர்கொண்ட பௌலர் நடராஜன், 4 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகியுள்ளார்.

இந்நிலையில போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, நடராஜன், மிகவும் சிறப்பாக தன்னை நிரூபித்து வருவதாக புகழ்ந்துள்ளார். மேலும் குறைந்த ஓவர்கள் போட்டிகளில் இந்திய அணியின் சொத்து அவர் என்றும் பாராட்டியுள்ளார். இந்த போட்டியில் மாற்று வீரராக களமிறங்கிய சஹலும் சிறப்பாக விளையாடி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 18:29 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+