டெஸ்ட் டீம்.. நடராஜன் குறித்து சச்சினே இப்படி கருத்து சொல்லிவிட்டாரா.. அப்ப மாஸ்தான்.. பின்னணி!
சிட்னி: தமிழக வீரர் நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் ஆடினால் நன்றாக இருக்கும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசி உள்ளார்.
இந்திய அணியில் இந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக தமிழக வீரர் நடராஜன் உருவெடுத்துள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து நடராஜன் நம்பிக்கை கொடுத்தார்.
அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். 3வது டி 20 போட்டியிலும் அவர் ஒரு விக்கெட் எடுத்தார். இந்த நிலையில் நட்ராஜனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசி உள்ளார்.

சச்சின்
சச்சின் டெண்டுல்கர் தனது பேச்சில் இஷாந்த் சர்மா இல்லாமல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி கொஞ்சம் சிரமப்படும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீச கூடியவர் இஷாந்த் சர்மா. ஆனால் ஒரு வீரரை மட்டும் நம்பி இந்திய அணி இல்லை.

நல்ல படை
இந்திய அணியில் நல்ல பவுலிங் படை இருக்கிறது. இந்திய அணி பல்வேறு வீரர்களின் கூட்டு அமைப்பு. அதனால் இஷாந்த் சர்மா இல்லாமலும் நம்மால் வெற்றிபெற முடியும். இங்குதான் நாம் நடராஜனை பற்றி பேச வேண்டும் .

சிறப்பாக ஆடினார்
அவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடினார். அவர் டெஸ்ட் அணியில் ஆடினால் நன்றாக இருக்கும். அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கலாம்.

தேர்வுக்குழு
ஆனால் இது முழுக்க முழுக்க தேர்வுக்குழுவின் முடிவு. தேர்வுக்குழுதான் இதை பற்றி யோசிக்க வேண்டும். நான் இதில் முடிவு எடுக்க முடியாது, என்று சச்சின் டெண்டுல்கர் நடராஜன் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன்
நடராஜனை இந்திய அணியில் நிரந்தரமாக சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். முக்கியமாக டி 20 அணியில் இவரை நிரந்தரமான வீரராக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். தற்போது சச்சினும் நட்ராஜனுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications