Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி

டெல்லி : முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் ஜாகிர் கான் சிறப்பாக செயல்பட்டது போல, விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் நடராஜன் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் கர்சன் கவ்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடது கை பந்துவீச்சாளருக்கான நீண்டகால தேடுதல் இருந்த நிலையில், தற்போது நடராஜன் சிறப்பான கண்டுபிடிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த ஒருநாள் தொடரில் 10 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள நடராஜன், தற்போது டி20 தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

3வது போட்டியில் இந்தியா வெற்றி

3வது போட்டியில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் 3க்கு 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வெற்றி கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்

2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்

இந்த போட்டியின்மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் தமிழ்நாட்டு இடதுகை பந்துவீச்சாளர் நடராஜன். இந்த போட்டியில் 10 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் தற்போது இன்று துவங்கவுள்ள டி20 தொடரிலும் இடம்பெற்றுள்ளார்.

சிறப்பான கண்டுபிடிப்பு

சிறப்பான கண்டுபிடிப்பு

இந்நிலையில் இந்திய அணியின் இடது கை பந்து வீச்சாளருக்கான நீண்டகால தேடுதலுக்கு நடராஜன் சிறப்பான கண்டு பிடிப்பு என்று முன்னாள் இந்திய அணியின் இடது கை பந்து வீச்சாளர் கர்சன் கவ்ரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் கோலியின் அணியில் சிறப்பான வீரர் நடராஜன் என்றும அவர் பாராட்டியுள்ளார்.

விராட் கோலி -நடராஜன்

விராட் கோலி -நடராஜன்

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கீழ் ஜாகிர் கான் சிறப்பாக செயல்பட்டது போல தற்போது கோலியின் அணியில் நடராஜன் சிறப்பாக செயல்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சிறப்பான கேப்டனாக செயல்பட்டுவரும் கோலி நடராஜனை ஊக்குவித்து அவர் அதிகமாக கற்றுக் கொள்ள உதவுவார் என்றும் கூறினார்.

Story first published: Friday, December 4, 2020, 10:39 [IST]
Other articles published on Dec 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+