Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிவேகமாக ஓடி.. கச்சிதமாக நடராஜன் பிடித்த கேட்ச்.. கோஷமிட்டு பாராட்டிய வீரர்கள்.. வைரலாகும் வீடியோ

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் நேற்று நடந்த பயிற்சியின் போது பிடித்த கேட்ச் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதாவிற்கு மாற்று வீரராக தற்போது தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளார்.

ஆனால் இவர் இந்திய அணியில் ஆடுவாரா என்பது கேள்வியாக உள்ளது. தீவிரமாக தற்போது இவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது ஷரத்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். வலைப்பயிற்சியிலேயே இவர் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை

நம்பிக்கை

இவர் பவுலிங் செய்யும் விதம் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழு இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழு இவரின் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது என்கிறார்கள். இவரின் பேட்டிங்கும் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நடராஜன் நேற்று நடந்த பயிற்சியின் போது பிடித்த கேட்ச் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. பிசிசிஐ அமைப்பே இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது. அந்த வீடியோவில் பயிற்சியாளர் அடித்த பந்தை வேகமாக ஓடி நடராஜன் கேட்ச் பிடித்துள்ளார்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

நொடிப்பொழுதில் வேகமாக ஓடி நடராஜன் இந்த கேட்சை பிடித்துள்ளார். மிக கடினமான கேட்சை, வேகமாக ஓடி நடராஜன் பிடித்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட வந்த பலரையும் இந்த கேட்ச் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கேட்ச்

கேட்ச்

இந்த கடினமான கேட்சை நடராஜன் பிடித்தவுடன் சக வீரர்கள் கோஷம் எழுப்பி இவரை பாராட்டி உள்ளனர்.நடராஜனின் இந்த வீடியோவை பகிர்ந்து பிசிசிஐ.. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் மிக இறுக்கமாக பிடித்துக்கொள்கிறார் என்று டிவிட் செய்து பாராட்டி உள்ளனர.

Story first published: Sunday, January 3, 2021, 12:50 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+