Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உறுதியானது.. உமேஷ் யாதவிற்கு மாற்றாக உள்ளே வரும் நடராஜன்.. பிசிசிஐ அதிரடி.. ஆனால் சின்ன சிக்கல்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவிற்கு மாற்று வீரராக நடராஜன் களமிறக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. உமேஷ்க்கு பதில் நடராஜன்.. பிசிசிஐ அறிவிப்பு..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பவுலர் உமேஷ் யாதவிற்கு காயம் ஏற்பட்டது. இவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் பாதி போட்டியில் வெளியேறினார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் இவர் ஆட மாட்டார். அதன்பின் 4வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆடுவார் என்று செய்திகள் வந்தது.

நீக்கம்

நீக்கம்

ஆனால் உமேஷ் யாதவின் காயம் குணமாகாத நிலையில் தற்போது மொத்தமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரின் காயம் குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் மொத்தமாக இவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு இன்று உமேஷ் யாதவிற்கு குழந்தை பிறந்ததால், அவர் இந்தியா திரும்புகிறார்.

மாற்று

மாற்று

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவிற்கு மாற்று வீரராக நடராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வலைபயிற்சியில் நெட் பவுலராக நடராஜன் உள்ளார். இவர் இந்திய அணியில் இணைக்கப்பட்டதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

யார்

யார்

அதேபோல் இந்திய அணியில் முகமது ஷமிக்கு மாற்று வீரராக ஷரத்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி காயம் காரணமாக வெளியேறிய நிலையில் ஷரத்துல் தாகூர் அவருக்கு மாற்றாக வருகிறார். இதனால் நடராஜனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆம் இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோர் களமிறங்க உள்ளனர். இன்னொரு பவுலர் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதன்படி பெரும்பாலும் ஷரத்துல் தாகூர் அணியில் இறங்குவார் என்று கூறுகிறார்கள். முதல் தர போட்டிகளில் பெரிய அளவில் நடராஜன் ஆடியது இல்லை என்பதால் ஷரத்துல் தாகூர் வாய்ப்பு பெறுவார் என்கிறார்கள்.

Story first published: Friday, January 1, 2021, 17:00 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+