Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவசர அவசரமாக.. இரவோடு இரவாக நடராஜனுக்கு சென்ற போன்..இந்திய அணி அறிவிப்பிற்கு முன் நடந்த பரபர சம்பவம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 இந்திய அணி அறிவிப்பிற்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது.

இதில் ஒரு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று இருக்கிறது. மூன்றாவது நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

இதே மைதானத்தில் 5 டி 20 போட்டிகளும் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை முழுக்க நடந்த மீட்டிங்கிற்கு பின் நேற்று இரவு இந்திய அணி அறிவிக்கப்பட்டது .

அணி விவரம்

அணி விவரம்

இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்யா குமார், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள்

வீரர்கள்

இந்திய அணியில் மீண்டும் நடராஜன் இணைந்துள்ளார். அதேபோல் தமிழக வீரர்கள் வாஷிங்க்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோரும் இணைந்துள்ளனர். நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்படுவது குறித்து அவருக்கு போன் மூலம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

ஒரு வாரத்திற்கு முன், போனில் இவரிடம் இந்திய அணியில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர் சென்னையில் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கு பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போதுதான் இவருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 நீக்கம்

நீக்கம்

இதை தொடர்ந்து தமிழ்நாடு அணியில் இருந்து இவர் ரிலீஸ் செய்யப்பட்டார். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர் பயிற்சி பெற்று வருகிறார். நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின் இவர் இந்திய அணியுடன் இணைய வேண்டும் என்று உத்தர பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, February 21, 2021, 8:49 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+