Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிதான் கவனமாக இருக்க வேண்டும்.. நடராஜன் சந்திக்க போகும் பெரிய சவால்..வரும் நாட்களில் என்ன நடக்கும்?

சென்னை: இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு முக்கியமான சில சவால்கள் காத்து இருக்கிறது.

தமிழக வீரர் நடராஜன் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளார். இந்திய அணியில் இவர் நிரந்தரமாக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும் முதல் டி 20 போட்டியில் இவர் ஆடிய விதம் பலரையும் கவர்ந்து இருக்கிறது. முக்கியமாக இவரின் பவர்பிளே பவுலிங் மற்றும் டெத் ஓவர் பவுலிங் பெரிய அளவில் நம்பிக்கையை அளித்துள்ளது.

சவால் 1

சவால் 1

இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி 20யில் அறிமுக போட்டியிலேயே முறையே 2 மற்றும் 3 விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர் தொடர்ந்து ஆட வேண்டும் என்று அழுத்தம் இருக்கிறது. இதனால் அவர் கவனமாக இருக்க வேண்டும்.

கவனம் ஏன்

கவனம் ஏன்

ஏனென்றால் புவேனஸ்வர்குமார், பும்ரா, ஷமி ஒரு மூவரில் ஒருவர் இடம்பெறாத போதுதான் இந்திய அணியில் நடராஜன் வாய்ப்பை பெறுகிறார். இதனால் மூத்த வீரர்களுக்கு நிகராக விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நடராஜன் இருக்கிறார். சவால் 2 என்று பார்த்தால் நடராஜன் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

2019

2019

2019 ஐபிஎல் தொடரின் போதே நடராஜன் காயம் காரணமாக அவதிப்பட்டார். அப்போது அவரால் அந்த தொடரில் பவுலிங் செய்ய முடியவில்லை . இப்போது இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் ஷமி போல அடிக்கடி காயம் அடையாமல், பும்ரா போல தனது உடலை காயம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் அவர் கவனமாக இருக்க வேண்டும்.

மாற்றம்

மாற்றம்

சவால் 3 என்று பார்த்தால் நடராஜன் இன்னும் கூடுதல் வேரியேஷன்களை கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த போட்டியிலேயே யார்க்கர் மட்டுமின்றி ஸ்லோ பாலா, லென்த் பால் போட்டு நடராஜன் அசத்தினார். வரும் போட்டிகளில் இன்னும் கூடுதலாக பவுன்சர் போன்ற புதிய வித்தைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு மாற்றம்

வேறு மாற்றம்

கடைசி சவால் என்று பார்த்தால் நடராஜன் தனது ஸ்டைலை மாற்ற கூடாது. இந்திய அணிக்குள் வந்த பல வீரர்கள் தங்கள் ஸ்டைலை மாற்றி மொத்தமாக காணாமல் போய் உள்ளனர். சில வீரர்கள் ஸ்டைலை மாற்றி பெரிய ஆளாக உருவெடுத்துள்ளனர். நடராஜன் சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது ஸ்டைலை தக்க வைக்க, மெருகேற்ற வேண்டும்.

Story first published: Sunday, December 6, 2020, 12:14 [IST]
Other articles published on Dec 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+