Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஹசாரே கோப்பை தொடர்... தமிழ்நாடு டீம்ல இணையறாரு நடராஜன்... சூப்பரப்பு!

சென்னை : விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 18ம் தேதி முதல் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கான தமிழ்நாடு அணியில் நடராஜன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பிசிசிஐயின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைகொண்டுள்ளது.

சிறப்பான சையத் முஸ்தாக் அலி கோப்பை

சிறப்பான சையத் முஸ்தாக் அலி கோப்பை

இந்தியாவில் உள்ளூர் போட்டிகள் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நடத்தப்படாத நிலையில் கடந்த மாதத்தில் சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் நடத்தப்பட்டுள்ளது. இதில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதிய நிலையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது.

18ம் தேதி துவக்கம்

18ம் தேதி துவக்கம்

இதையடுத்து விஜய் ஹசாரே ஒருநாள் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் இந்த தொடர் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரின் போட்டிகள் நடைபெற்ற இடங்களிலேயே இந்த தொடரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக் கேப்டன்

தினேஷ் கார்த்திக் கேப்டன்

இந்நிலையில் இந்த கோப்பைக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வீரர்களை கொண்ட இந்த அணிக்கும் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டர் பாபா அபரஜித் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நடராஜனும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருப்பு

பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருப்பு

இதுகுறித்து அறிவித்துள்ள தமிழ்நாடு அணியின் தேர்வாளர் எஸ் வாசுதேவன், நடராஜனை அணியில் இணைத்துள்ள போதிலும் அவரை இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக ப்ரெஷ்ஷாக வைக்க விரும்பலாம் என்ற அடிப்படையில் பிசிசிஐயின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பான அணி

சிறப்பான அணி

இதேபோல கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த முஸ்தாக் அலி கோப்பை தொடரில் விளையாடாத மீடியம் பந்துவீச்சாளர் கே விக்னேஷ் இந்த தொடரில் விளையாடவுள்ளார். மொத்தத்தில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் இணைந்த கலவையாக இந்த அணி இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Thursday, February 4, 2021, 16:19 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+